அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்!

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க.,
DMDK, Vijayakanth, Premalatha


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:


ஆர்.சுப்பு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நடந்து முடிந்த, தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவு, ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும், ஒவ்வொருவிதமான பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய கட்சி, தே.மு.தி.க.,

ஜெயலலிதாவால் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற்ற, தே.மு.தி.க., அக்கட்சியை அனுசரித்து நடந்திருக்க வேண்டும். அதை விடுத்து, தே.மு.தி.க.,வால் தான், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது போல, 'பில்டப்' கொடுத்ததால், கூட்டணி உடைந்தது. இதனால், தே.மு.தி.க.,வில் இருந்து ஒவ்வொருவராக கழன்று, அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அதோடு, 'இனி, தே.மு.தி.க.,வுக்கு இறங்கு முகம் தான்' என, ஜெயலலிதா கூறியது, அடுத்த சில ஆண்டுகளில் பலித்தது.

கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் மற்றும் ம.தி.மு.க.,வுடன் இணைந்து, 'மக்கள் நலக் கூட்டணி' எனப் பெயர் சூட்டி, முதல்வர் வேட்பாளராக, விஜயகாந்தை முன்மொழிந்தனர். பாவம்... அக்கூட்டணி, ஒரு இடத்தில் கூட வெல்ல முடியவில்லை. அப்போதே, தே.மு.தி.க., உஷாராகி இருக்க வேண்டும். அதை விடுத்து, '2021 தேர்தலில், தே.மு.தி.க., 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்; விஜயகாந்த் தான், 'கிங் மேக்கராக' இருப்பார். கூட்டணியில், 60 'சீட்' தர வேண்டும்' என, அக்கட்சியினர் வாயாலேயே, 'வடை' சுட்டனர்.


latest tamil news



ஆனால் அந்த, 'வடை' அ.தி.மு.க., - தி.மு.க.,விடம் போணியாகவில்லை. கடைசியில், நேற்று முளைத்த, தினகரனின், அ.ம.மு.க.,வுடன் கூட்டணி அமைத்தது. போட்டியிட்ட, 60 தொகுதிகளிலும் 'டிபாசிட்'டை பறிகொடுத்தது. இப்போது பேந்த பேந்த முழிக்கின்றனர், தே.மு.தி.க.,வினர்! விஜயகாந்தை சட்டசபைக்கு தேர்ந்தெடுத்து அனுப்பிய விருத்தாசலம் தொகுதி, அவரின் மனைவி பிரேமலதாவிற்கு, டிபாசிட் கூட கிடைக்காத அளவுக்கு, பலத்த அடி கொடுத்துள்ளது. தே.மு.தி.க.,வின் தேர்தல் கூட்டணி, வியூகம் அனைத்தும், பிரேமலதாவால் தான் மேற்கொள்ளப்பட்டது. அக்கட்சியின் அழிவுக்கு, அவரே முழுக் காரணம்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மே-202105:18:06 IST Report Abuse
meenakshisundaram 'திராணி இருந்தால் '-என்று என்னிக்கு ஜெ சொன்னாரோ அன்னிக்கே விஜயகாந்த் கதை முடிஞ்சுட்டதே ஏதோ தமிழ் மக்களை திமுக மாதிரி கொஞ்ச காலத்துக்கு ஏமாத்தினாங்க
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202113:53:08 IST Report Abuse
Malick Raja காணமயிலாட கண்டிருந்த வான்கோழி .. கதையாகிவிட்டது . இனி ஒருக்காலும் தீரவே தேறமுடியாது .. முற்றிலும் முடங்கினால் கூட பரவாயில்லை .. ஆனால் நிலை கைவிட்டுப்போனது கட்சியை கரைதொழித்துவிட்டது .. கட்சியின் தப்போதையை நிலையில் "வணக்கம் " போட்டு சுணக்கமில்லாமல் வேறு பணிகளை பார்ப்பது சாலச்சிறந்தது
Rate this:
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
05-மே-202120:11:54 IST Report Abuse
Nalam Virumbi அதிக பட்சம் டெபாசிட் இழந்த கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X