பொது செய்தி

தமிழ்நாடு

காந்தியடிகளின் செயலர் கல்யாணம் காலமானார்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை : மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.தேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர். லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக
Kalyanam, Mahatma Gandhi, personal secretary

சென்னை : மஹாத்மா காந்தியின் கடைசி செயலராக இருந்த காந்தி கல்யாணம், 99, நேற்று(மே 4) காலமானார்.


latest tamil news



தேச தந்தை மஹாத்மா காந்தியின் கடைசி காலத்தில், அவரின் நேர்முக செயலராக இருந்தவர் கல்யாணம். காந்தி சுடப்பட்ட போது, அவரின் அருகில் இருந்தவர். லேடி மவுண்ட் பேட்டனுடன் இணைந்து, சமூக சேவைகளில் ஈடுபட்டார். சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு, ஐ.நா.,வின் துாதராக சென்றவர். உலக அமைதிக்காக பாடுபட்டு வந்தார்.


latest tamil news



இவர், சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள தன் மகள் நளினி வீட்டில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக உடல்நலம் குன்றியிருந்த அவர், நேற்று காலமானார். அவரது உடல், பெசன்ட் நகர் மின் மயானத்தில், இன்று மதியம், 1:30 மணிக்கு எரியூட்டப்படுகிறது. அவரது மனைவி சரஸ்வதி ஏற்கனவே இறந்து விட்டார். மாலினி, நளினி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUN MOHAN -  ( Posted via: Dinamalar Android App )
05-மே-202119:31:10 IST Report Abuse
SUN MOHAN காந்தியுடன் இருந்த ஒரு நல்லவர் என்று கேட்கும்போது காந்தியை சந்திக்க முடியாத நாம் அவரது செயலாரையாவது பார்த்து அவரது ஆசிர்வாதத்தையாவது நாம் கிடைக்க பெற்று இருக்கலாம்.,,,
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
05-மே-202116:59:00 IST Report Abuse
oce காந்தியுடன் ஒத்துழைத்த இத்தகைய பெரியவர்களது படங்களை காங்கிரஸ் கட்சியினர் இந்திய அளவில் போஸ்டர்களில் ஒட்டியும் கட்சி அலுவலகங்களில் படங்களாக வைத்தும் பொது இடங்களில் சிலைகள் அமைத்தும் அவ்வப்போது நினைவஞ்சல் செய்து வந்திருந்தால் காங்கிரஸ் கட்சியை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். இந்த மாதிரி விளம்பரத்தனங்களை இந்தியாவில் திராவிட கட்சிகள் தவிர எவரும் செய்யவில்லை.
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
05-மே-202113:53:27 IST Report Abuse
Rasheel நாட்டில் 1965 சுதந்திர போராட்ட வீரர்கள் ஆட்சி செய்தனர். அவர்களுக்கு தனது குடும்பத்தை விட மூவர்ண கோடி உயிரை விட மேலானது. 1965 பின்னால் இரண்டாம் தலைமுறை அரசியல் வியாதிகள் உண்டானார்கள். அவர்கள் சிறிதளவு அக்கிரமங்கள் செய்தனர். 1970கு பின்னால் மூன்றாம் தலைமுறை அரசியல் வியாதிகள் உண்டானார்கள். அவர்கள் அரசியல் வியாதிகள் மட்டுமல்ல. சிலர் ரௌடியைகள் தொழில் அதிபர்கள் அரசியல் ப்ரோக்கர்கள் உடன் சேர்ந்து கொண்டு ஆட்சியை பீடத்தை பிடித்த கதை நமக்கு தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X