சென்னை : ''தேர்தலில் சரியாக பணியாற்றாத நிர்வாகிகள், உறுப்பினர்கள் விரைவில் நீக்கப்படுவர்,'' என, கமல் தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் தோல்வி குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று விவாதிக்கப்பட்டது. கட்சி தலைவர் கமல் தலைமையில் நடந்த கூட்டத்தில், துணை தலைவர் மகேந்திரன், பொதுச் செயலர்கள் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், தேர்தலில் சரியாக பணியாற்றாதவர்கள் மீதான நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் கமல் பேசியதாவது: மக்கள் நீதி மய்யத்தின் சக்கரம் நிற்காது. அது சுற்றிக் கொண்டே இருக்கும். தோல்வி நமக்கு தடையல்ல. இதை பொருட்படுத்தாமல் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் கவனம் செலுத்த வேண்டும்.இப்போது செய்த தவறில் இருந்து, நம்மை திருத்திக் கொள்ள வேண்டும். அமைப்பு ரீதியாக கட்சியை மேலும் பலப்படுத்த வேண்டும். தேர்தல் பணியாற்றாதவர்கள் மீது, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE