பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொற்று பரவுவதை தடுக்க, பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிப்பு அதிகரிப்பதால், தடை

கோவை : கொரோனா அதிகரித்து வருவதால், மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தொற்று பரவுவதை தடுக்க, பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் பகுதிகள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிப்பு அதிகரிப்பதால், தடை செய்யப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தற்போது மாநகர் பகுதியில், 94, புறநகரில், 151 என, 245 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'பாதிப்பு அதிகரிப்பதை தடுக்க அனைவரும், முகக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாவிடில், பாதிப்பு இன்னும் அதிகரிக்கும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X