பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி 'டிவி'யில் பாடம் எப்படி மாணவர்களிடம் கேட்க உத்தரவு

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளை மாணவர்களிடம் திரட்டி, அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து, இப்புத்தக கருத்துகளை மாணவர்கள் படிக்க ஏதுவாக,

கோவை : கல்வித்தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய கருத்துகளை மாணவர்களிடம் திரட்டி, அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களிடம் ஒப்படைக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டது. வீட்டிலிருந்து, இப்புத்தக கருத்துகளை மாணவர்கள் படிக்க ஏதுவாக, கல்வித்தொலைக்காட்சியில் இதுசார்ந்து பாட வாரியாக, ஆசிரியர்கள் விளக்கும் வீடியோ திரையிடப்படுகிறது.அந்தந்த வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களை தொடர்பு கொண்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இதன்படி, கடந்த மாதம் 22ம் தேதியில் இருந்து, வரும் 10ம் தேதி வரை, கல்வி தொலைக்காட்சி யில், எந்தெந்த வகுப்புக்கு, என்னென்ன பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்ற கால அட்டவணை வெளியிடப்பட்டது.இந்த வீடியோக்கள் பற்றிய கருத்துக்களை மாணவர்களிடம் பெற்று, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பாளர்களிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த அட்டவணை, வரும் 10ம் தேதிக்கு பிறகு மாற்றப்படுவதால், இக்கருத்துக்கள் பெறப்படுவதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X