அரசியல் செய்தி

தமிழ்நாடு

கொரோனா சிகிச்சை, படுக்கை வசதி விபரமறிய விரைவில் 'ஹெல்ப்லைன்'

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை :: ''கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, விரைவில் 'ஹெல்ப் லைன்' துவங்கப்படும்,'' என்று கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளார். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள பா.ஜ.,வின் வானதி சீனிவாசன், கலெக்டர் நாகராஜனை நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா சிகிச்சை வசதிகள், மருந்து, தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்தார்.அதற்கு கலெக்டர்

கோவை :: ''கோவை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளின் வசதிக்காக, விரைவில் 'ஹெல்ப் லைன்' துவங்கப்படும்,'' என்று கலெக்டர் நாகராஜன் கூறியுள்ளார்.

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்வாகியுள்ள பா.ஜ.,வின் வானதி சீனிவாசன், கலெக்டர் நாகராஜனை நேற்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, கொரோனா சிகிச்சை வசதிகள், மருந்து, தடுப்பூசி இருப்பு குறித்து கேட்டறிந்தார்.அதற்கு கலெக்டர் நாகராஜன் கூறியதாவது:கோவையில் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மட்டும் சென்னையிலிருந்து, தேவைக்கு தகுந்தாற்போல் கொண்டு வரப்படுகிறது.

கோவையில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளவும், படுக்கை வசதிகள் இருப்பு நிலவரம் தெரிந்து கொள்ளவும், 24 மணி நேர ஹெல்ப் லைன் எண் வசதி விரைவில் துவங்கப்படும்.அதில் பொதுமக்களிடமிருந்து வரும் தேவைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில் , உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா சிகிச்சை மையங்களை, கூடுதலாக ஏற்படுத்துவதற்கும் திட்டமிட்டு வருகிறோம்.இவ்வாறு, கலெக்டர் கூறினார். தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனையும் சந்தித்துப்பேசினார். அவருடன் கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X