சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி கேட்டு திரள்கின்றனர் மக்கள்

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை, : கோவை அரசு கலைக்கல்லுாரியில், தடுப்பூசி போடுவதற்காக வந்த 500க்கும் மேற்பட்டவர்களில், 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மக்கள் அதிருப்தி யடைந்தனர். கோவை அரசு கலைக்கல்லுாரியில், கடந்த 1ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஆரம்பம் முதலே இங்கு போதுமான அளவு தடுப்பூசி இருப்பு இல்லாமல் உள்ளது.அதேசமயம், தினமும்,

கோவை, : கோவை அரசு கலைக்கல்லுாரியில், தடுப்பூசி போடுவதற்காக வந்த 500க்கும் மேற்பட்டவர்களில், 100 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதால், மக்கள் அதிருப்தி யடைந்தனர்.

கோவை அரசு கலைக்கல்லுாரியில், கடந்த 1ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஆரம்பம் முதலே இங்கு போதுமான அளவு தடுப்பூசி இருப்பு இல்லாமல் உள்ளது.அதேசமயம், தினமும், தடுப்பூசிக்காக 500க்கும் மேற்பட்ட மக்கள், இங்கு முற்றுகையிடுவதால், தடுப்பூசி செலுத்தும் ஊழியர்கள், செய்வதறியாது புலம்பி வருகின்றனர். நேற்று மொத்த கையிருப்பே 100 தடுப்பூசிகள்தான். அதை செலுத்துவதற்காக, காலை 7:00 மணி முதலே, மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தடுப்பூசி இல்லை எனக்கூறியும், மக்கள் வரிசையில் காத்திருந்தனர்.

இதுகுறித்து கேட்பதற்காக, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமாரை பல முறை தொடர்பு கொண்டும் பலனில்லை.பெயர் சொல்ல விரும்பாத சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், '45 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு, தடுப்பூசி போடக்கூடாது என அரசு அறிவுறுத்தியும், தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசி போட்டுள்ளனர். 'இதனால் அங்கு ஏற்கனவே, முதல் டோஸ் போட்டவர்களுக்கு, இரண்டாம் டோஸ் போடமுடியவில்லை. அவர்கள் இங்கு வருகின்றனர். தட்டுப்பாடு ஏற்பட இதுவும் ஒரு காரணம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X