பொது செய்தி

தமிழ்நாடு

மத்தவங்க மனசுக்கு 'மருந்து' போடுறோம்

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : பள்ளிகள் மூடப்பட்டதால், நடமாடும் உளவியல் மைய ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ள மன அழுத்தத்தை குறைக்கவும், கவனசிதறல்களில் இருந்து விடுவிக்கவும், கடந்த 2014ல் நடமாடும் உளவியல் மையம் துவங்கப்பட்டது.மொத்தம் 10 மையங்கள் அமைக்கப்பட்டு, பிரத்யேக வாகனம் வழங்கியதோடு, ஓட்டுநர், உளவியல் ஆலோசகர்கள்

கோவை : பள்ளிகள் மூடப்பட்டதால், நடமாடும் உளவியல் மைய ஊழியர்கள் சம்பளமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

பள்ளி மாணவர்கள் மத்தியில் உள்ள மன அழுத்தத்தை குறைக்கவும், கவனசிதறல்களில் இருந்து விடுவிக்கவும், கடந்த 2014ல் நடமாடும் உளவியல் மையம் துவங்கப்பட்டது.மொத்தம் 10 மையங்கள் அமைக்கப்பட்டு, பிரத்யேக வாகனம் வழங்கியதோடு, ஓட்டுநர், உளவியல் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டனர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களிடம் பெறப்படும் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், தலா ஒரு ரூபாய் மருத்துவ நிதியாக பெறப்படும். இத் தொகையை கொண்டு, அந்தந்த மாவட்டங்களில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அறிவுறுத்தப்பட்டது. ஓட்டுநருக்கு மாதம் 10 ஆயிரம், உளவியல் ஆலோகசருக்கு 25 ஆயிரம் ரூபாய், மாத சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டும், ஆண்டு இறுதியில் நிதியின்றி, ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

கடந்த ஜன., மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கடந்த நான்கு மாதங்களாக மட்டுமே ஊதியம் பெற்றனர். இப்போது பள்ளிகள் மூடப்பட்டதால், அடுத்த மாத குடும்ப செலவுகளுக்கு, திணறும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பலரும் புலம்பி வருகின்றனர்.உளவியல் ஆலோசகர்கள் சிலர் கூறியதாவது:எங்களுக்கான ஊதியத்தை, அந்தந்த மாவட்ட தொகுப்பு நிதியில், வழங்கும் முறையை கைவிட்டு, மாநில தொகுப்பு நிதியில் இருந்து வழங்க வேண்டுமென, நீண்டநாள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.பல மாவட்டங்களில் அரசுப்பள்ளிகள் குறைவாக இருப்பதால், ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. இதோடு, முந்தைய ஆண்டுகளில், மே மாதம் மட்டுமே, கோடை விடுமுறையால், ஊதியம் வழங்கப்படவில்லை.ஆனால், தற்போது பள்ளி எப்போது மீண்டும் திறக்கும் என தெரியாமல், பல மாதங்களாக ஊதியம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள் போல, உளவியல் ஆலோசகர்களுக்கும், எந்த தடையும் இன்றி ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X