சொட்டு நீர் பாசன தொட்டி விவசாயிகளுக்கு வாய்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சொட்டு நீர் பாசன தொட்டி விவசாயிகளுக்கு வாய்ப்பு

Added : மே 05, 2021
Share
கோவை : துணை நீர் மேலாண்மை திட்டத்தில், சொட்டு நீர் பாசன திட்டத்தில், தொட்டி அமைத்து மானியம் பெற, பெயர் பதிவு துவங்கியது. சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.தற்போது, துணை நீர் மேலாண்மை திட்டத்தில், ஒரு லட்சம் லி., நீர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க, 40 ஆயிரம்

கோவை : துணை நீர் மேலாண்மை திட்டத்தில், சொட்டு நீர் பாசன திட்டத்தில், தொட்டி அமைத்து மானியம் பெற, பெயர் பதிவு துவங்கியது.

சிறு, குறு மற்றும் பெரிய விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைக்க, தோட்டக்கலைத்துறை சார்பில், 100 சதவீதம் மற்றும் 75 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.தற்போது, துணை நீர் மேலாண்மை திட்டத்தில், ஒரு லட்சம் லி., நீர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்க, 40 ஆயிரம் ரூபாயும், மின்மோட்டார் வாங்குவதற்கு, 15 ஆயிரம் ரூபாய் மற்றும் குழாய் அமைக்க, 10 ஆயிரம் ரூபாயும் மானியமாக வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற ஆர்வமுள்ள விவசாயிகள், அந்தந்த பகுதி ஒன்றிய தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில், பெயர் பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.முதலில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு, முன்னுரிமை அடிப்படையில், திட்டம் செயல்படுத்தப்படும் என, அதிகாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X