பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா; பால் கொள்முதல் விலை சரிவு

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா தொற்று பரவல் காரணமாக, தனியார் கொள்முதல் மையங்களில், பால் விலை லிட்டருக்கு, 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சிறு, குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கறவை மாடுகள் வாயிலாக கிடைக்கும் பால், ஆவின் பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கும், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கும்,

கோவை : கொரோனா தொற்று பரவல் காரணமாக, தனியார் கொள்முதல் மையங்களில், பால் விலை லிட்டருக்கு, 6 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சிறு, குறு விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கறவை மாடுகள் வாயிலாக கிடைக்கும் பால், ஆவின் பால் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கும், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்களுக்கும், விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த ஆண்டு முதல், ஆவின் பால் கொள்முதல் விலை, கொழுப்பு தன்மைக்கு ஏற்ப லிட்டருக்கு, அதிகபட்சமாக, 30 ரூபாய் 49 காசு வரை வழங்கப்படுகிறது.

தனியார் பால் கொள்முதல் மையங்களில், லிட்டருக்கு, 30 ரூபாய் வரை வழங்கப்பட்டது. அதனால், பெரும்பாலான விவசாயிகள், ஆவின் பால் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்கின்றனர். இச்சூழலில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் கிராம டீ கடைகள் வழக்கமாக வாங்கும் பால் அளவை குறைத்துக் கொண்டன. சிலர் கடைகளை அடைத்து, பால் வாங்குவதை நிறுத்தி விட்டனர்.இதேபோல, கொரோனா பரவலால், வேலையை இழந்தவர்கள், வேலைக்கு செல்பவர்கள், குடும்ப செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக, பால் வாங்குவதை தவிர்த்துள்ளனர்.

இதனால், தனியார் பால் கொள்முதல் நிறுவனங்கள், இழப்பை தவிர்க்க, பால் கொள்முதல் விலையை, லிட்டருக்கு, 6 ரூபாய் குறைத்து, 24 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. திடீர் விலை குறைப்பால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்தனர்.கறவைகளுக்கு உணவாக வழங்கப்படும் புண்ணாக்கு, பருத்திக்கொட்டை மற்றும் தவிடு விலை, கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பால் விலை குறைப்பால், கால்நடை வளர்ப்போருக்கு கட்டுப்படியான விலை கிடைப்பதில்லை.ஆவின் பால் கொள்முதல் மையங்களை போன்று, தனியார் நிறுவனங்களும் விலையை குறைக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X