பொது செய்தி

தமிழ்நாடு

சொக்கம்புதுாரில் 'கண் மூடியது' தெருவிளக்கு!

Added : மே 05, 2021
Share
Advertisement
கழிவுநீர் தேக்கம்குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் 2, சீனிவாச நகர் மற்றும் சீ.டி.ஒ., நகருக்கு இடையே உள்ள பள்ளத்தில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- சதீஷ்குமார், குறிச்சி.எரியா விளக்குசொக்கம்புதுார், அய்யாவுபன்னாடி தெருவிலுள்ள மின்கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரியவில்லை.- விஸ்வநாதன், சொக்கம்புதுார்.திறந்தவெளியில் குப்பைஅன்னுார், கரீம் சாய்பு சந்து

கழிவுநீர் தேக்கம்குறிச்சி ஹவுசிங் யூனிட், பேஸ் 2, சீனிவாச நகர் மற்றும் சீ.டி.ஒ., நகருக்கு இடையே உள்ள பள்ளத்தில், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.- சதீஷ்குமார், குறிச்சி.

எரியா விளக்குசொக்கம்புதுார், அய்யாவுபன்னாடி தெருவிலுள்ள மின்கம்பத்தில், கடந்த ஒரு மாதமாக மின்விளக்கு எரியவில்லை.- விஸ்வநாதன், சொக்கம்புதுார்.

திறந்தவெளியில் குப்பைஅன்னுார், கரீம் சாய்பு சந்து பகுதியில் குடிநீர் குழாய் அருகே திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சாய்ராஜ், அன்னுார்.

விபத்துக்கு வாய்ப்புவடவள்ளி, வி.என்.ஆர்., நகர், மூன்றாவது வீதியில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம், சாலையில் நிறுவியுள்ள கம்பத்தால், விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.- பார்த்தசாரதி, வடவள்ளி.

மாசுபடும் காற்றுகே.கே.புதுார், எஸ்.பி.காலனி, சர்ச் ரோடு, கிருஷ்ணம்மாள் வீதியில், குப்பைகளை எரிப்பதால், காற்று மாசுபாடு ஏற்படுகிறது.- வெங்கட், கே.கே.புதுார்.

சுகாதார சீர்கேடுசெல்வபுரம், ராஜரத்தினம் நகரில், சாலையில் திறந்தநிலையில் கழிவுநீரை விடுவோரால், அப்பகுதியில் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.- ராஜரத்தினம் நகர் பொதுமக்கள்.

ஆபத்தான கம்பம்கணபதி, ஸ்ரீ நகர், பாரதி நகர் பகுதியில், கான்கிரீட் சிதிலமடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி இருக்கும் மின்கம்பத்தை, உடனடியாக அகற்ற வேண்டும்.- ஆதவன், கணபதி.

பாதசாரிகளுக்கு நெருக்கடிசெல்வுபுரம், தில்லைநகரில் சாலையின் இருபுறமும் கார்கள், பைக்குகளை நிறுத்துவதால், பாதசாரிகள் நடப்பதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.- ரத்தினகுமார், செல்வபுரம்.

இருளில் அதிகரிக்கும் குற்றம்சிங்காநல்லுார், நேதாஜிபுரத்தில் தெருவிளக்கு எரியாததால், இரவில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடக்கின்றன.- ஜெகநாதன், சிங்காநல்லுார்.

சாக்கடை அடைப்புதண்ணீர்பந்தல் மெயின் ரோடு, 37வது வார்டில், சாக்கடை கால்வாயை சரிவர துார்வாராததால், கடந்த ஒரு மாதமாக, கழிவுநீர் அடைத்து நிற்கிறது.- பழனி, தண்ணீர்பந்தல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X