பொது செய்தி

தமிழ்நாடு

'அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை'

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை, : ''உரத்துக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி எச்சரித்துள்ளார். அவர் கூறி இருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் உழவு செய்ய துவங்கி உள்ளனர். பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள், தொடக்க வேளாண்

கோவை, : ''உரத்துக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி எச்சரித்துள்ளார்.

அவர் கூறி இருப்பதாவது: கோவை மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் உழவு செய்ய துவங்கி உள்ளனர். பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் போதிய அளவு இருப்பு உள்ளது.கோவை மாவட்ட உர விற்பனையாளர்கள், ஆதார் அட்டை உடன் வரும் விவசாயிகளுக்கு மட்டும் உரம் விற்பனை செய்ய வேண்டும். இருப்பில் உள்ள உரங்களை, உர விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது.

மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். உர விற்பனை நிலையங்கள் விலை பட்டியல் விவரங்களை, தெரியப்படுத்தும் அறிவிப்பு பலகை வைத்து, உரிய படிவங்களில் விவசாயி களின் கையொப்பம் பெற்று உரங்களை வழங்க வேண்டும்.அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே, உரங்களை இருப்பு வைக்க வேண்டும். உர முட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்ய கூடாது.அப்படி விற்பனை செய்தால், விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு, 0422- - 2432739 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X