சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அறிகுறி ஏதும் இல்லாத கொரோனா நோயாளிகள்!

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை, : அறிகுறியில்லாத கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள், அஜாக்கிரதையாக சுற்றுவதால் பாதிப்பு அதிகரிப்பதாக, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடுகிறது. சுகாதார துறையினர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகி வருகிறது. பாதிப்பு அதிகரிப்பதற்கான

கோவை, : அறிகுறியில்லாத கொரோனா நோய் தொற்றுக்குள்ளானவர்கள், அஜாக்கிரதையாக சுற்றுவதால் பாதிப்பு அதிகரிப்பதாக, சுகாதாரத்துறையினர் எச்சரிக்கின்றனர்.

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடுகிறது. சுகாதார துறையினர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகி வருகிறது. பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்து, சுகாதார துறையினர் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில் அறிகுறியில்லாத கொரோனா நோயாளிகள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து வெளியில் நடமாடுவதும் பாதிப்பு அதிகரிக்க காரணம் எனத் தெரியவந்துள்ளது.

சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'அறிகுறியில்லாத கொரோனா தொற்றுக்கு உள்ளாவோர், தாங்கள் நலமுடன் உள்ளதாக, தொடர்ந்து வெளியில் சுற்றுகின்றனர்; பணிக்கு செல்கின்றனர். இதன் மூலம் பலருக்கும் தொற்று பரவுகிறது.கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறி இல்லை என்றாலும், உடல் சோர்வு இருக்கும். அவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், தொற்றின் தன்மைக்கு ஏற்ப, மருத்துவமனையில் அனுமதியாக வேண்டும்.இல்லை என்றால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தேவையான மருந்துகளை உட்கொள்வது அவசியம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X