பொது செய்தி

தமிழ்நாடு

போன் 'சுத்தமா' இருக்கா... நெருங்குது பல்கலை தேர்வுகள்!

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா பாதிப்பு காரணமாக, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அனைத்து கல்விநிறுவனங்களும் தயாராகியுள்ள சூழலில், மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் தேவையற்ற ஆப்களைஅகற்ற வேண்டும். பெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளை, மொபைல் போன் பயன்படுத்தி எழுதுவதுடன், விடைத்தாள் நகலை அதன் மூலமே பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. தேவையற்ற ஆப்களால், தேர்வின்போது இடையூறு ஏற்படும் என,

கோவை : கொரோனா பாதிப்பு காரணமாக, ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்த அனைத்து கல்விநிறுவனங்களும் தயாராகியுள்ள சூழலில், மாணவர்கள் தங்கள் மொபைல் போனில் தேவையற்ற ஆப்களைஅகற்ற வேண்டும்.

பெரும்பாலான மாணவர்கள் தேர்வுகளை, மொபைல் போன் பயன்படுத்தி எழுதுவதுடன், விடைத்தாள் நகலை அதன் மூலமே பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. தேவையற்ற ஆப்களால், தேர்வின்போது இடையூறு ஏற்படும் என, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பாரதியார் பல்கலை பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 'பாரதியார் பல்கலையின் கீழ் அனைத்து கல்லுாரிகளிலும் பருவத்தேர்வுகள், 10ம் தேதி துவங்கவுள்ளன. தேர்வு முழுமையாக கண்காணிக்கப்படும்.தேர்வு முடிந்த பின், குறிப்பிட்ட நேரத்திற்குள் நகலை மாணவர்கள் பதிவேற்றம் செய்யவேண்டும்.

இரண்டு பக்கங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள, வழிகாட்டுதல் களை முழுமையாக படிக்க வேண்டியது கட்டாயம்.92 சதவீத மாணவர்கள் முறையாக பதிவேற்றம் செய்தாலும், சிலர் பதிவேற்றம் செய்யமுடியவில்லை; சர்வர் சிக்கல் என்று கூறுவது உண்டு.மொபைல் போனில் விளையாட்டுகள், வீடியோ, ஆடியோ போன்ற பல ஆப்களை பயன்படுத்தி வருவதே காரணம். இதனால், தேர்வுக்கு முன் தேவையற்ற ஆப்களை மாணவர்கள் இப்போதே அகற்றி விட வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X