பொது செய்தி

தமிழ்நாடு

வீடு தேடி வருகிறது இலவச உணவு!

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை, : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இலவச உணவு பொட்டலங்களை, டெலிவரி செய்து வருகிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுரபி பங்கஜ். மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு, 23 ஆயிரத்து, 502 வாக்குகள் பெற்றவர், சுரபி பங்கஜ். தேர்தல் தோல்வியை துாக்கி பரணில் போட்டு விட்டு, மக்கள் சேவையில்

கோவை, : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீட்டு சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு, இலவச உணவு பொட்டலங்களை, டெலிவரி செய்து வருகிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் சுரபி பங்கஜ்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை, கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு, 23 ஆயிரத்து, 502 வாக்குகள் பெற்றவர், சுரபி பங்கஜ். தேர்தல் தோல்வியை துாக்கி பரணில் போட்டு விட்டு, மக்கள் சேவையில் இறங்கி விட்டார்.கொரோனாவால் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு, மூன்று வேளை உணவை, 14 நாட்கள் இலவசமாக வீட்டுக்கே அனுப்பி வைக்கிறார்.உணவு அனைத்தும் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் சமைத்து, பாக்கெட் செய்து வீட்டு வாசலில், டெலிவரி செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இன்று முதல், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், கணுவாய், டி.வி.எஸ்., நகர் பகுதிகளில், இந்த சேவை துவங்கப்படுகிறது.

கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள், 98430 19579 என்ற எண்ணுக்கு, தங்களின் கொரோனா தொற்று சான்றிதழை அனுப்பினால், அடுத்த 14 நாட்களுக்கு வேளா வேளைக்கு, சத்தான உணவு இலவசமாக வீடு தேடி வரும். இத்துடன், நோயாளிகள் விரைவில் குணமடைய, கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.சுரபி பங்கஜ் கூறுகையில், ''கடந்த முறை மக்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, அடங்கிய அத்தியாவசியப் பொருட்களை வழங்கினோம். தற்போது, வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் பலர், நோய் பாதிப்பால், வீட்டு வேலைகள் செய்வதில் சிரமம் ஏற்படுகிறது.

அதனால், உணவு பொருட்களுக்கு பதிலாக உணவாக கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என, இந்த திட்டத்தை துவங்கியுள்ளேன். நோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, தேவைக்கேற்ப அனைத்து பகுதிகளிலும், இந்த சேவையை தொடர திட்டமிட்டுள்ளோம்,'' என்றார். கொரோனாவால் வீட்டு தனிமையில் இருப்பவர்கள், 98430 19579 என்ற எண்ணுக்கு, தங்களின் கொரோனா தொற்று சான்றிதழை அனுப்பினால், அடுத்த 14 நாட்களுக்கு வேளா வேளைக்கு, சத்தான உணவு இலவசமாக வீடு தேடி வரும். இத்துடன், நோயாளிகள் விரைவில் குணமடைய, கபசுர குடிநீர் பொடி பாக்கெட்டுகளும் வழங்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X