பொது செய்தி

தமிழ்நாடு

ஆன்லைன் வழி கல்வியால் எழுத மறந்து போச்சே!

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை : ஆன்லைன் வழி கல்வியால், பல குழந்தைகள் எழுதும் பழக்கத்தையும், இது வரை பயின்ற எழுத்துகளையும் மறந்து விட்டதாக, பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவலால், ஆரம்ப கல்வி வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே ஓராண்டாக நடந்து வருகிறது. இதனால், கற்றல் - கற்பித்தல் முறை மாறி விட்டது.அவற்றில், பாடப்புத்தகங்களின் 'க்யூ ஆர் கோட்' வசதி, கல்விக்கென பிரத்யேக ஒளிபரப்புகள்,

கோவை : ஆன்லைன் வழி கல்வியால், பல குழந்தைகள் எழுதும் பழக்கத்தையும், இது வரை பயின்ற எழுத்துகளையும் மறந்து விட்டதாக, பெற்றோர்கள் புலம்பி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலால், ஆரம்ப கல்வி வகுப்புகள் ஆன்லைனில் மட்டுமே ஓராண்டாக நடந்து வருகிறது. இதனால், கற்றல் - கற்பித்தல் முறை மாறி விட்டது.அவற்றில், பாடப்புத்தகங்களின் 'க்யூ ஆர் கோட்' வசதி, கல்விக்கென பிரத்யேக ஒளிபரப்புகள், இணையதளங்களில் பாடம் என, ஆன்லைன் கல்வி முறையை நோக்கி, பயணத்தை துவங்கி விட்டனர்.தற்போதைய சூழலில், இதுவே சிறந்தது என்றாலும், பல பிரச்னைகளை குழந்தைகள் சந்தித்து வருகின்றனர். தினமும் 4- 6 மணி நேரம் கணினி, மொபைல் போனில் பாடம் கற்கும் குழந்தைகள், எழுதும் பழக்கத்தை முற்றிலும் கைவிட்டு விட்டனர்.

பல குழந்தைகள், இது வரை பயின்ற எழுத்துகளையும் முற்றிலும் மறந்து விட்டதாக பெற்றோர் புலம்புகின்றனர்.பெற்றோர் ஒருவர் கூறுகையில்,'எனது மகன் தற்போது 2ம் வகுப்பு படிக்கிறான். கடந்த ஆண்டு முன் யூ.கே.ஜி., படிக்கும் போது, 1-15 வரை ஆங்கிலத்தில் எழுதுவான். ஆன்லைன் வகுப்புகளால், எழுத்து பயிற்சி குறைந்து விட்டது' என்றார்.கல்வியாளர் ஒருவர் கூறுகையில், 'ஓராண்டு இடைவெளி ஆகி விட்டதால், பள்ளிக்கு செல்லும் போது, இது போன்ற பல சவால்களை சந்திக்க நேரிடும். பள்ளிகள் திறக்கும் வரை, வீட்டில் அவர்கள் எழுதுவதற்கு தனி நேரம் ஒதுக்கி, பெற்றோர் பயிற்சி அளிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X