பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறல்... கொரோனாவால் 'மூச்சுத்திணறும்' கோவை!

Added : மே 05, 2021
Share
Advertisement
கோவை, : கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மூச்சுத்திணறல் காரணமாக, பலரும் மருத்துவமனைகளில் செயற்சை சுவாச கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவைக்கு அனுப்பப்படும், திரவ நிலை ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்குள் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும், என ஆக்ஸிஜன் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி தகவல்
 ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறல்... கொரோனாவால் 'மூச்சுத்திணறும்' கோவை!

கோவை, : கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், மூச்சுத்திணறல் காரணமாக, பலரும் மருத்துவமனைகளில் செயற்சை சுவாச கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவைக்கு அனுப்பப்படும், திரவ நிலை ஆக்ஸிஜன் அளவு வெகுவாக குறைக்கப்பட்டு உள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்குள் பெரும் நெருக்கடியை சந்திக்க நேரிடும், என ஆக்ஸிஜன் விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு, 1,500க்கும் மேல் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்.

தற்சமயம், எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு, நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், செயற்கை சுவாச சிகிச்சை என்பது மிகவும் அவசியம். தற்போது, சிகிச்சை பெற்று வருபவர்களில் பெரும்பாலானோருக்கு செயற்கை சுவாசம் வாயிலாகதான் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.இப்படிப்பட்ட சூழலில், மருத்துவமனைகளுக்கு போதுமான அளவு திரவ நிலை ஆக்ஸிஜன், வினியோகஸ்தர்களால் சப்ளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், அடுத்த, சில நாட்களில் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தீர்ந்து, நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தாகி விடும், என்கின்றனர், ஆக்ஸிஜன் வினியோகஸ்தர்கள். கேரளா சப்ளை நிறுத்தியதுகோவை, இடிகரையில் உள்ள ஆக்ஸிஜன் கம்பெனி மேலாளர் லட்சுமிகுமார் கூறியதாவது:கோவை மாவட்டத்தில், இடிகரை, நரசிம்மநாயக்கன் பாளையம், சின்னவேடம்பட்டி, தென்னம்பாளையம் மற்றும் கிணத்துக்கடவு ஆகிய இடங்களில், 'ரீ பாட்லிங்' தொழிற்சாலைகள் உள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும், திரவ நிலை ஆக்ஸிஜன் இந்த தொழிற்சாலைகளில், சேமித்து வைக்கப்படுகின்றன.

பின், இங்கிருந்து மருத்துவமனைகளுக்கு, திரவ நிலை ஆக்ஸிஜனாகவும் அல்லது சிலிண்டரில் அடைக்கப்பட்ட பிராண வாயுவாகவும் மாற்றப்பட்டு, விநியோகம் செய்யப்படுகின்றன. மைனஸ் 196 டிகிரியில் திரவ நிலை ஆக்ஸிஜனாகவும், மைனஸ் 194 டிகிரிக்கு கீழ் சென்றால் அது வாயுவாக மாறி விடும். தற்போதைய சூழலில், மாதத்திற்கு ஐந்து சிலிண்டர் பயன்படுத்திய ஒரு மருத்துவமனைக்கு, கொரோனாவுக்கு பின் ஒருநாளைக்கே ஐந்து சிலிண்டர் தேவைப்படுகிறது. ஆனால், கோவையில் உள்ள, ஏழு 'ரீ பாட்லிங்' தொழிற்சாலைகளுக்கு கடந்த சில நாட்களாக ஆக்ஸிஜன் சப்ளையே இல்லை.

ஒரு ரீபாட்லிங் தொழிற்சாலைக்கு நாள் ஒன்றுக்கு 15 டன் ஆக்ஸிஜன் பெறப்பட்டு வந்த நிலையில், தற்போது, மூன்று நாளைக்கு ஒருமுறை வெறும் ஐந்து டன் அளவு மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது.இதில், கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையில் இருந்துதான், பெரும்பாலும் கோவைக்கு ஆக்ஸிஜன் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கேரளாவில் உள்ள மருத்துவமனைக்கு அதிகம் அனுப்பப்படுவதால், கோவைக்கு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

இது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கோவையில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு, இன்று (நேற்று) இரவு 8:00 மணி வரை மட்டுமே, நோயாளிகளுக்கு அளிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் கையிருப்பு இருக்கிறது. கோவைக்கு தினமும் குறிப்பிட்ட அளவு ஆக்ஸிஜன் கிடைப்பதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, மக்கள்தான் இனி பாதுகாப்பாக இருந்து அவர்களை உயிரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

2 நாளில் கையிருப்பு காலி : அனைத்திந்திய தொழிற்சாலை காஸ் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஜெயக்குமார் கூறியதாவது:கேரளா கஞ்சிக்கோட்டில் தயாரிக்கப்படும் திரவ நிலை ஆக்ஸிஜன், கேரள மாநிலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கே போதுமானதாக இருக்கிறது. கோவைக்கு இதுநாள் வரை அங்கிருந்துதான், 40 முதல் 50 டன் வரை ஆக்ஸிஜன் பெறப்பட்டு வந்தது. ஆனால், தற்போது வெறும், 5 முதல் 10 டன் அளவிற்குதான் வினியோகம் செய்யப் படுகிறது. இன்னும், இரண்டு நாட்கள் இதே நிலை நீடித்தால், நிறைய மருத்துவமனைகளில் ஆக்ஸிஜனே இருக்காது என்பதே உண்மை.

கோவை மாவட்டத்திற்கு தற்போதைய சூழலில் நாள் ஒன்றுக்கு, 2,000 சிலிண்டர் வரை தேவைப்படுகிறது. இதுபோக, திரவ நிலை ஆக்ஸிஜன், அரசு மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை தவிர்த்து, 25 டன் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி, 10 டன் கொடுப்பதே சிரமமாக உள்ளது. நாளுக்கு நாள் தட்டுப்பாடு என்பது அதிகரித்துக் கொண்டே போகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நோயாளிகளை காப்பாற்ற முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X