சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா விற்பனையில் தகராறு இருவர் வெட்டி கொலை

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சூலுார் : கோவை மாவட்டம், சூலுார் பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 50. இவரது மகன் சரவணக்குமார், 28, இவர் மீது கஞ்சா விற்ற வழக்கு சூலுார் ஸ்டேஷனில் உள்ளது. இவருக்கும் சிங்காநல்லூர் கக்கன்நகரை சேர்ந்த வசந்த்,30, என்பருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஆனந்த் குடிபோதையில், வசந்த் வீட்டுக்கு சென்று தகராறு

சூலுார் : கோவை மாவட்டம், சூலுார் பள்ளபாளையம் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ஆனந்த், 50. இவரது மகன் சரவணக்குமார், 28, இவர் மீது கஞ்சா விற்ற வழக்கு சூலுார் ஸ்டேஷனில் உள்ளது.

இவருக்கும் சிங்காநல்லூர் கக்கன்நகரை சேர்ந்த வசந்த்,30, என்பருக்கும் இடையே கஞ்சா விற்பனை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஆனந்த் குடிபோதையில், வசந்த் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளார். இதை அறிந்து, நேற்று முன்தினம் வசந்த் மற்றும் நண்பர்கள் மகேஷ், பிரேம் ஆகியோர் ஆனந்தை அவரது வீட்டுக்கு சென்று தாக்கியுள்ளனர். அவர் கொடுத்த புகாரின்படி சூலுார் போலீசார் விசாரித்தனர். இந்நிலையில் நேற்று காலை, வசந்த் மற்றும் கூட்டாளிகள் இருவர் மீண்டும் ஆனந்துடன் தகராறு செய்துள்ளனர்.

தடுக்க முயன்ற மகன் சரவணக்குமாரை கத்தியால் குத்தினர். அவரது தம்பி சதீஷ்குமார் மற்றும் நண்பர்கள் ஹரி, தினேஷ், ஸ்ரீநாத் ஆகியோர், வசந்த், மகேஷ் மற்றும் பிரேமை ஓட, ஓட விரட்டி தாக்கி, கத்தி யால் குத்தியுள்ளனர்.இதில், வசந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். பலத்த காயமடைந்த மகேஷ், பிரேம், கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மகேஷ்,28, இறந்தார்.சரவணக்குமார், சதீஷ்குமார் உள்ளிட்ட ஐந்து பேரை, போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-மே-202105:37:05 IST Report Abuse
டுமீலன் கட்டபஞ்சாயத்து கஞ்சாகிராக்கி வழிப்பறி கொள்ளை கொலை இனா இதெல்லாம் ஏரியா பிரிப்பில் அடிதடி நடக்கும்.. அதன்பிறகு ஆட்டம் ஆரம்பம் ஆகும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X