அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வரின் முதல் கையெழுத்து; அதிகரிக்கிறது எதிர்பார்ப்பு

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
சென்னை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், எந்த திட்டத்தை செயல்படுத்த, முதல் கையெழுத்திடுவார் என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகளில், ஜூன், 3ம் தேதி, 4,000 ரூபாய் உதவித்தொகை. காஸ்
DMK, MK Stalin, Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதும், எந்த திட்டத்தை செயல்படுத்த, முதல் கையெழுத்திடுவார் என்ற, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உரிமைத் தொகை; கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கடைகளில், ஜூன், 3ம் தேதி, 4,000 ரூபாய் உதவித்தொகை. காஸ் சிலிண்டருக்கு, 100 ரூபாய் மானியம்; எரிபொருள் விலை, 5 ரூபாய் வரை குறைப்பு; ஆவின் பால் லிட்டருக்கு, 3 ரூபாய் குறைப்பு; அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச அனுமதி உள்ளிட்ட, பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றன.


latest tamil news


இதுமட்டுமின்றி, ஒவ்வொரு தொகுதியிலும், பொது மக்களிடம் புகார் மனுக்களை ஸ்டாலின் வாங்கினார். ஆட்சி பொறுப்பேற்ற, 100 நாட்களில், இந்த மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியையும், ஸ்டாலின் அளித்துள்ளார். இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வரும், 7ம் தேதி, முதல்வராக பதவி ஏற்கவுள்ளார். அதன்பின், தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் அறைக்கு சென்று, பணிகளை துவங்கவுள்ளார்.

அப்போது, தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்தபடி, எந்த திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு, தி.மு.க.,வினர் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது. குடும்ப தலைவிகளுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமைத் தொகை, இலவச பஸ் பயண அனுமதி ஆகிய திட்டத்தை செயல்படுத்த, அவர் முதல் கையெழுத்திட, அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - coimbatore,இந்தியா
06-மே-202108:13:43 IST Report Abuse
ravi இன்னும் உரக்க கதறுங்கள் admk அடிமைகளே ... கதறுங்கள்... உங்கள் பொறாமை குணத்திற்கு தமிழ் மக்கள் அடித்த சவுக்கடி ..... வாங்கிட்டு கதறுங்கள் ... நன்றாக கதறுங்கள் ...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
05-மே-202119:22:59 IST Report Abuse
bal அரசியலை விட்டு விலகுகிறேன்...நாங்கள் செய்த ஊழலுக்கு வருந்துகிறேன்...இனி பொய் சொல்ல மாட்டேன்.
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
06-மே-202100:00:19 IST Report Abuse
தல புராணம்நீங்க சொல்றவரு முந்தாநேத்து ராஜினாமாவை கொடுத்துட்டாரே.....
Rate this:
Karthik - Doha,கத்தார்
06-மே-202111:53:39 IST Report Abuse
Karthikதல: நாளைக்கு ஒருத்தருக்கும் சேர்த்துத்தான்...
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
05-மே-202119:22:10 IST Report Abuse
bal இதிலென்ன சந்தேகம்..எதில் அதிக லாபமோ அதில்தான்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X