சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கவில்லை; செங்கல்பட்டு கலெக்டர்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக கூறப்பட்டது. ஆனால் இதனை கலெக்டர் மறுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா
செங்கல்பட்டு, கொரோனா, பலி, ஆக்ஸிஜன்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியானதாக கூறப்பட்டது. ஆனால் இதனை கலெக்டர் மறுத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கொரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இங்குள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவித்தன.


latest tamil news



சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில்: இறந்த நோயாளிகளில் ஒருவர் மட்டுமே கெரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஏனையோர் வயது முதிர்வு மற்றும் பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள் ஆவர்.
'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
05-மே-202119:34:24 IST Report Abuse
kosu moolai வெளிப்பட தன்மை இருக்க வேண்டியதுதான் . அதுக்குன்னு இப்படியா. சுடலை ஐயா இப்படி வெள்ளந்தியா இருக்காதிங்கே. .
Rate this:
Cancel
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
05-மே-202117:33:40 IST Report Abuse
பஞ்ச்மணி உண்மை / நடுநிலை அதை எல்லாம் மறந்த ஊடகங்கள் இப்போ அதிகம்
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
05-மே-202116:42:52 IST Report Abuse
Sivagiri இனிமே எல்லாம் அப்டித்தான் . . . ஆங் . . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X