சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு மூவர் பலி

Added : மே 05, 2021
Share
Advertisement
செவ்வாப்பேட்டை : செவ்வாப்பேட்டை ஊராட்சியில், நேற்று, கொரோனா தொற்றுக்கு, கணவர், மனைவி இறந்தனர். மேலும் திருத்தணியில் பெண் ஒருவரும் இறந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் தற்போது ஆயிரத்தை தாண்டி வருகிறது.திருவள்ளூர், செவ்வாப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம், 68. இவரது மனைவி, சுசீலா, 62; மகன், சரவணன், 32.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து

செவ்வாப்பேட்டை : செவ்வாப்பேட்டை ஊராட்சியில், நேற்று, கொரோனா தொற்றுக்கு, கணவர், மனைவி இறந்தனர். மேலும் திருத்தணியில் பெண் ஒருவரும் இறந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா தொற்று பரவல் தற்போது ஆயிரத்தை தாண்டி வருகிறது.திருவள்ளூர், செவ்வாப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம், 68. இவரது மனைவி, சுசீலா, 62; மகன், சரவணன், 32.தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் சரவணன், கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.இந்நிலையில், மீனாட்சிசுந்தரமும், சுசீலாவும், கொரோனா தொற்று பாதிப்பால், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், நேற்று இருவரும் இறந்தனர். ஊராட்சி மன்ற நிர்வாகம் ஒத்துழைப்புடன், இருவரது உடல்களும், செவ்வாப்பேட்டை சுடுகாடு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன.

கொரோனா தொற்றுக்கு கணவர், மனைவி இறந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. இதையடுத்து நேற்று, ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.திருத்தணி: திருத்தணி நகராட்சி, 20வது வார்டு அமிர்தாபுரம் பகுதியைச் சேர்ந்த, 45 பெண் ஒருவர், சில நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.இதையடுத்து, அவரை இரு நாட்கள் முன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானது தெரிய வந்தது.இந்நிலையில், நேற்று காலை, பெண் இறந்தார். அதை தொடர்ந்து, சுகாதார துறையினர் தகுந்த பாதுகாப்புடன் பெண் பிணத்தை, அவர்களது உறவினர்கள் முன்னிலையில் அடக்கம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X