சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
மொபைல் போன்கள் பறிப்புவியாசர்பாடி: வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்த 53, வயது நபர், நேற்று அதிகாலை, கனேசபுரம் வழியாக சைக்கிளில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.செம்பியம்: பெரம்பூர், மடுமா நகரைச் சேர்ந்த, 32 வயது ஐ.டி., ஊழியர், நேற்று காலை எம்.டி.எச்., சாலையில் நடந்து சென்ற ேபாது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல்

மொபைல் போன்கள் பறிப்புவியாசர்பாடி: வியாசர்பாடி, பக்தவச்சலம் காலனியைச் சேர்ந்த 53, வயது நபர், நேற்று அதிகாலை, கனேசபுரம் வழியாக சைக்கிளில் சென்றார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.செம்பியம்: பெரம்பூர், மடுமா நகரைச் சேர்ந்த, 32 வயது ஐ.டி., ஊழியர், நேற்று காலை எம்.டி.எச்., சாலையில் நடந்து சென்ற ேபாது, பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.

ஓட்டேரி, பழைய வாழை மா நகரைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர். நேற்று முன்தினம் அதிகாலை, பெரம்பூர், முரசொலி மேம்பாலத்தில், நடைபயிற்சி செய்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரது மொபைல் போனை பறித்து சென்றனர்.இச்சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.பைக்கை விட்டு சென்ற திருடர்கள்கொடுங்கையூர்: கொடுங்கையூர், விவேகானந்தா நகரில் உள்ள, ஒரு மளிகை கடையின் பூட்டை உடைத்து, மர்ம நபர்கள், ௨௦ ஆயிர்ம் ரூபாயை கொள்ளையடித்தனர். சத்தம் கேட்டு, கடையின் உரிமையாளர் அங்கு வருவதை அறிந்த கொள்ளையர்கள், தங்கள் பைக்கை அங்கேயே விட்டு தப்பிச் சென்றனர். கொடுங்கையூர் போலீசார், விசாரிக்கின்றனர்.வாலிபர் தற்கொலைபல்லாவரம்: பல்லாவரம், மலகானந்தபுரத்தை சேர்ந்த சரண்ராஜ், 29, மது பழக்கத்திற்கு அடிமையானர். மது குடிக்க வீட்டில் பணம் கேட்டு தகராறு செய்தார். பணம் கிடைக்காததால், நேற்று காலை, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருடர்களை 'நையப்புடைத்த' மக்கள்வேப்பேரி: ஓட்டேரியைச் சேர்ந்தவர் அம்மு, 30; மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். வேப்பேரி ஜெர்மியா சாலையிலுள்ள நிறுத்தத்தில், நேற்று அதிகாலை, 5:00 மணியளவில், பேருந்துக்காக காத்திருந்தார்.அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அம்முவின் மொபைல் போனை பறித்து தப்பினர். ஓட்டேரி, ஐ.சி.எப்., பகுதியிலும், இவர்கள்,'கைவரிசை' காட்டினர். ஐ.சி.எப்., பகுதியில் இருந்து தப்பிக்கும் போது, ஒருவர் மீது இருசக்கர வாகனத்தை மோதியதால், பொதுமக்கள் இவர்களை நையப்புடைத்து, போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், வியாசர்பாடியைச் சேர்ந்த முகமது ரபிக், 20, மற்றும் விஜய், 19, என்பது தெரிந்தது. வேப்பேரி போலீசார் கைது செய்து, ஐந்து மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.வாலிபருக்கு 'தர்ம அடி' வளசரவாக்கம்: வளசரவாக்கம், ஸ்ரீலட்சுமி நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் செல்வி, 58. அம்மா உணவக ஊழியர். நேற்று முன்தினம் பணி முடிந்து, கங்கையம்மன் கோவில் தெரு வழியாக வந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், இவரது, 5 சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார்.செல்வி கூச்சலிடவே, அங்கிருந்தவர்கள் மர்ம நபரை பிடித்து, 'தர்ம அடி' கொடுத்து, வளசரவாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், கே.கே.நகர், ஜீவானந்தம் சாலையைச் சேர்ந்த ஜெயகுமார், 28, என தெரிந்தது. வளசரவாக்கம் போலீசார், அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பெயின்டருக்கு கத்தி குத்துஅபிராமபுரம்: ஆர்.ஏ.புரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 39. நேற்று அதிகாலை, இதே பகுதி அ.தி.மு.க., பிரமுகரின் தாயார் இறப்பிற்கு சென்று, அங்கு வந்த பெயின்டர் கார்த்திக், 33 என்பவருடன் மது அருந்தி உள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஆத்திரமடைந்த கார்த்திக், இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஆறுமுகத்தை வெட்டிவிட்டு தப்பினார்.அபிராமபுரம் போலீசார், ஆறுமுகத்தை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவர் வாக்குமூலத்தின்படி, கார்த்திக்கை நேற்று கைது செய்தனர்.தொழிலாளியை குத்தி 'பைக்' பறிப்புபுழல்: புழல், மன்னன் தெருவைச் சேர்ந்த வசந்தன், 35, நேற்று அதிகாலை, 5:15 மணியளவில், புழல், ஜி.என்.டி., சாலையின் அணுகு சாலையில், தன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, மொபைல் போனில் பேசினார்.அங்கு, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், இவரின் மொபைல் போனை பறிக்கு முயன்ற போது தடுத்தார். அப்போது, அந்த இருவரில் ஒருவர், கத்தியால் வசந்தனின் மார்பில் குத்தியதால், தப்பித்து ஓடினார். உடனே, மர்ம நபர்கள், இவரது இருசக்கர வாகனத்தை, திருடிச் சென்றனர். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.கல்லுாரி மாணவர் மீது தாக்குதல்அபிராமபுரம்: அபிராமபுரம், படவட்டான் தெருவைச் சேர்ந்தவர் கவுதம், 21; கல்லுாரி மாணவர். அவர், நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு அருகே நின்ற போது, நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின், மது குடிப்பதற்கு, ௧,௦௦௦ ரூபாய் கேட்டுள்ளனர். பணம் தர மறுத்த கெளதமை அந்த கும்பல் தாக்கியது. அதே தெருவைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஹேமந்த், தன் நண்பர்களுடன், அவர் மீது தாக்குதல் நடத்தியது விசாரனையில் தெரியவந்தது. தலைமறைவான நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.லாட்டரி விற்ற வாலிபர் சிக்கினார்குமரன் நகர்: சைதாப்பேட்டை, ஜோன்ஸ் சாலையில், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட குமரன் நகர் போலீசார், ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட, தேனாம்பேட்டையைச் சேர்ந்த கோபி, 19, என்பவரை நேற்று கைது செய்தனர்.நகை திருடியவருக்கு 'கம்பி'அடையாறு: அடையாறு, வெங்கடரத்தினம் நகரைச் சேர்ந்தவர் கோகுல்நாத், 36. கொரோனா காரணமாக, கடந்த ஆண்டு சொந்த ஊரான திருச்சிக்கு, குடும்பத்துடன் சென்றார். வீட்டு சாவியை, எதிர் வீட்டில் உள்ள சண்முகம், 45, என்பவரிடம் கொடுத்தார். நேற்று முன்தினம், கோகுல்நாத், குடும்பத்துடன் வீட்டுக்கு திரும்பினார்.பீரோவில் இருந்த, 6 சவரன் நகை திருடு போயிருந்தது. அடையாறு போலீசார் விசாரணையில், சண்முகம், நகையை திருடியது தெரிந்தது. சண்முகத்தை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.கார் கண்ணாடி உடைத்தவருக்கு காப்புகொளத்துார்: கொளத்துார், சாந்தி நகர், 4வது தெருவைச் சேர்ந்தவர் பால்சின்னதுரை, 48; டியூஷன் ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் இரவு, தன் காரை வீட்டிற்கு முன் நிறுத்தி இருந்தார். காருக்கு அருகே, ஜவஹர் நகரைச் சேர்ந்த மணிவண்ணன், 19 மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர், மதுபோதையில் ஆயுதங்களுடன் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பால்சின்னதுரையின் கார் கண்ணாடியை, அவர்கள் உடைத்துள்ளனர். கொளத்தூர் போலீசார், மணிவண்ணனை நேற்று கைது செய்தனர்.தாய் திட்டியதால் மகன் தற்கொலைபல்லாவரம்: அனகாபுத்துார், பாலாஜி நகர் விரிவு, அப்பர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித், 27; அண்ணாசாலையில் உள்ள, புத்தக கடையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி, குடிபோதையில் வந்த ஸ்ரீஜித்தை, அவரது தாய் ஜெயக்குமாரி கண்டித்துள்ளார். பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றுள்ள, அவரது மனைவிக்கும் தகவல் தெரிவித்தார். இதனால், மனமுடைந்த ஸ்ரீஜித், நேற்று காலை, துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வழிப்பறி திருடர்கள் கைதுசிந்தாதிரிப்பேட்டை: சிந்தாதிரிப்பேட்டை, பம்பிங் ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த அஜித், 21, நேற்று அதிகாலை, அருணாச்சலம் சாலையில் நடந்து சென்றார். இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், அவரிடம் மொபைல் போனை பறித்து தப்ப முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தனர். வழிப்பறியில் ஈடுபட முயன்ற இருவரையும் கைது செய்த போலீசார், 6 மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X