திருத்தணி ஏரியில் மீன்கள் இறப்பில் மர்மம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருத்தணி ஏரியில் மீன்கள் இறப்பில் மர்மம்

Added : மே 05, 2021
Share
திருத்தணி : திருத்தணி, சித்தேரியில் இருந்த பல ஆயிரக்கணக்கான மீன்கள், மர்மமான முறையில் இறந்து, தண்ணீரில் மிதக்கின்றன. திருத்தணி நகராட்சி, ஜோதி நகர் அருகே, சித்தேரி உள்ளது. இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்தாண்டு நவம்பர், -டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால், ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இருந்தன.இந்நிலையில், நேற்று, மர்மமான

திருத்தணி : திருத்தணி, சித்தேரியில் இருந்த பல ஆயிரக்கணக்கான மீன்கள், மர்மமான முறையில் இறந்து, தண்ணீரில் மிதக்கின்றன.

திருத்தணி நகராட்சி, ஜோதி நகர் அருகே, சித்தேரி உள்ளது. இந்த ஏரி, 100 ஏக்கர் பரப்பு கொண்டது. கடந்தாண்டு நவம்பர், -டிசம்பர் மாதம் பெய்த தொடர் மழையால், ஏரி நிரம்பி வழிந்தது. இந்த தண்ணீரில் பல்லாயிரக்கணக்கான மீன்கள் இருந்தன.இந்நிலையில், நேற்று, மர்மமான முறையில், ஏரியில் இருந்த ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து தண்ணீரில் மிதந்தன.ஏரியில், மர்ம நபர்கள் யாராவது விஷம் கலந்ததால் மீன்கள் இறந்தனவா, அல்லது ஏரியின் தண்ணீர் மாசுபட்டதால் மீன்கள் இறந்து மிதிக்கின்றனவா என, மர்மமாக உள்ளது.வருவாய் துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மீன்களை பார்வையிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X