சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அங்கன்வாடி ஊழியர்கள்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஊத்துக்கோட்டை : அங்கன்வாடி மைய ஊழியர் இறந்து ஈமச்சடங்குக்கு பணம் தராததை கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பூண்டி ஒன்றியம், சித்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த, கிரேசிஞானதீபம் என்பவர், கடந்த, 28ம் தேதி இறந்தார்.இவருக்கு, ஈமச்சடங்கு செய்ய, அரசு சார்பில் வழங்கப்படும் பணம்

ஊத்துக்கோட்டை : அங்கன்வாடி மைய ஊழியர் இறந்து ஈமச்சடங்குக்கு பணம் தராததை கண்டித்து, அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

பூண்டி ஒன்றியம், சித்தம்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணியாற்றி வந்த, கிரேசிஞானதீபம் என்பவர், கடந்த, 28ம் தேதி இறந்தார்.இவருக்கு, ஈமச்சடங்கு செய்ய, அரசு சார்பில் வழங்கப்படும் பணம் வழங்கவில்லை என கூறப்படுகிறது. பணம் வழங்காத அதிகாரிகளை கண்டித்து, நேற்று, பூண்டி ஒன்றியத்தில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட தலைவர் மணிமேகலை தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X