பொது செய்தி

தமிழ்நாடு

1,613 படுக்கை வசதியுடன் கொரோனா வார்டு

Added : மே 05, 2021
Share
Advertisement
பெருங்குடி மண்டலத்தில், 1,613 படுக்கை வசதிகள் கொண்ட, மூன்று கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தரமணி, சென்னை பல்கலை வளாகத்தில், பிரமாண்ட பரிசோதனை மையமும் துரித கதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. சென்னை, புறநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெருங்குடி மண்டலத்தை பொறுத்தவரை, கொரோனா

பெருங்குடி மண்டலத்தில், 1,613 படுக்கை வசதிகள் கொண்ட, மூன்று கொரோனா வார்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தரமணி, சென்னை பல்கலை வளாகத்தில், பிரமாண்ட பரிசோதனை மையமும் துரித கதியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

சென்னை, புறநகரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பெருங்குடி மண்டலத்தை பொறுத்தவரை, கொரோனா இரண்டாவது அலையில், 3,844 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் தொற்று பாதிப்பு குறைவாக உள்ள, 2,922 பேர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.இந்த மண்டலத்தில், நேற்று ஒரே நாளில், 391 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சியின் சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

அத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வசதியாக, தரமணி, சென்னை பல்கலை வளாகத்தில் பரிசோதனை மையம் நிறுவப்பட்டுள்ளது. அங்கு தற்போது நாள்தோறும், நுாற்றுக்கணக்கானோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. நோய் தொற்றின் வீரியம் குறைவாக உள்ளவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். இந்த வகையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 76 சதவீதம் பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாதவர்களுக்கு வசதியாக, தரமணி, சென்னை பல்கலை வளாக விடுதியில், 872 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா தனிமை வார்டு அமைக்கப்பட்டு செயல்பட துவங்கி உள்ளது.அதே போல், பள்ளிக்கரணை, ஜெருசலேம் பொறியியல் கல்லுாரி விடுதியில், 477 படுக்கைகள் வசதி கொண்ட கொரோனா வார்டு அமைக்கப்பட்டு, இன்று முதல் செயல்பட உள்ளது.இது இல்லாமல், தரமணி, அம்பேத்கர் சட்ட பல்கலை விடுதியில், 264 படுக்கைகள் வசதியுடன் கொரோனா வார்டு விரைவில் அமைக்கப்பட உள்ளது.எனவே, பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி, தொற்று பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவமனைகளை தேடி அலையாமல் முதலில் தொற்றுக்கான பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X