மெட்ரோ ரயிலில் புதிய கட்டுப்பாடுகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் புதிய கட்டுப்பாடுகள்

Added : மே 05, 2021
Share
சென்னை : சென்னையில், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில், பயணியருக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மெட்ரோ ரயில்களில், நாளை முதல், வரும், 20ம் தேதி வரை, 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணியர் அமர்ந்து பயணிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டை பின்பற்ற ஏதுவாக, மெட்ரோ ரயில் இருக்கைகளில், குறிப்பிட்ட

சென்னை : சென்னையில், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மெட்ரோ ரயிலில், பயணியருக்கு புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, மெட்ரோ ரயில்களில், நாளை முதல், வரும், 20ம் தேதி வரை, 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணியர் அமர்ந்து பயணிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டுப்பாட்டை பின்பற்ற ஏதுவாக, மெட்ரோ ரயில் இருக்கைகளில், குறிப்பிட்ட இடைவெளியில், 'ஸ்டிக்கர்'கள் ஒட்டப்பட்டுள்ளன. ஸ்டிக்கர் ஒட்டிய இருக்கையை தவிர்த்து, அருகில் உள்ள இருக்கையில், அமர்ந்து பயணம் செய்ய, மெட்ரோ நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.'நிலையத்திலும், ரயிலிலும், முக கவசம் அணியாத பயணியர்களிடம், 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்; சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம்' எனவும் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X