பொது செய்தி

தமிழ்நாடு

சி.எம்.டி.ஏ., துணை தலைவர் பதவி

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், துணை தலைவர் பதவி, 10 ஆண்டுகளாக காலியாக உள்ளது. நகர், ஊரமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் பணிகளுக்காக, சி.எம்.டி.ஏ., ஏற்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக வருவோர், இதன் தலைவர்களாக நியமிக்கப்படுவர். இதற்கு அடுத்த நிலையில், துணை தலைவர் பதவியிலும், உறுப்பினர் செயலர் பதவியிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்

சென்னை : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில், துணை தலைவர் பதவி, 10 ஆண்டுகளாக காலியாக உள்ளது.

நகர், ஊரமைப்பு சட்டத்தை அமல்படுத்தும் பணிகளுக்காக, சி.எம்.டி.ஏ., ஏற்படுத்தப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக வருவோர், இதன் தலைவர்களாக நியமிக்கப்படுவர். இதற்கு அடுத்த நிலையில், துணை தலைவர் பதவியிலும், உறுப்பினர் செயலர் பதவியிலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்படுவர். கடந்த, 2006 - 2011 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், துணை தலைவர் பதவி முறையாக நிரப்பப்பட்டது.இந்நிலையில், 2011 தேர்தலில் வெற்றி பெற்று, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. அப்போது, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் பதவிக்கு மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார்.

துணை தலைவர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்படவில்லை.வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர், துணை தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது, தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வரும் நிலையில், சி.எம்.டி.ஏ.,வுக்கு துணை தலைவர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.இது குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது:சி.எம்.டி.ஏ.,வுக்கு, முழுநேர துணை தலைவர் நியமிப்பதில், புதிய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என, எதிர்பார்க்கிறோம். அமைச்சரவை அமைக்கப்பட்ட பின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றத்தின் போது, இதற்கான அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கிறோம்.

இதேபோன்று, சி.எம்.டி.ஏ., குழும உறுப்பினர்களாக, சென்னை பெருநகர் பகுதியில் இருந்து எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் நியமிக்கப்பட வேண்டும். புதிதாக அமைய உள்ள அரசு, இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X