பொது செய்தி

தமிழ்நாடு

70 ஆண்டு கனவு அமைச்சர் பதவி கிடைக்குமா?

Added : மே 05, 2021
Share
Advertisement
திருத்தணி : கடந்த, 15 முறை நடந்த சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாள ருக்கு, இதுவரை ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்குமா என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி சட்டசபை தொகுதியில், 1951ம் ஆண்டு முதல், 2021 வரை நடந்த, 15 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆறு முறையும், தி.மு.க., நான்கு முறையும், காங்கிரஸ், இரண்டு

திருத்தணி : கடந்த, 15 முறை நடந்த சட்டசபை தேர்தலில், திருத்தணி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாள ருக்கு, இதுவரை ஒருவருக்கு கூட அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

இம்முறை வாய்ப்பு கிடைக்குமா என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.திருத்தணி சட்டசபை தொகுதியில், 1951ம் ஆண்டு முதல், 2021 வரை நடந்த, 15 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஆறு முறையும், தி.மு.க., நான்கு முறையும், காங்கிரஸ், இரண்டு முறையும், பா.ம.க., தே.மு.தி.க., மற்றும் சுயேட்சை என, தலா ஒரு முறையும், வெற்றி பெற்றுள்ளன. சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வடக்கு எல்லை போராட்ட வீரர்கள் தளபதி கே.வினாயகம், ம.பொ.சிவஞானம், போன்றவர்கள் திருத்தணி தொகுதியைச் சேர்ந்தவர்கள். நாட்டுக்காக பாடுபட்டும், திருத்தணி தொகுதியை ஆந்திராவில் இருந்து மீட்டு, தமிழகத்துடன் இணைத்தவர்கள்.

இவ்வாறு பெருமை பெற்ற திருத்தணி சட்டசபை தொகுதியில், வெற்றி பெற்றவர்களுக்கு ஒருவருக்குகூட இதுநாள் வரை அமைச்சர் பதவியை, அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் வழங்கவில்லை.ஆந்திர மாநில எல்லையில் உள்ள திருத்தணி தொகுதியில், இம்முறை வெற்றி பெற்ற தி.மு.க., வேட்பாளர் எஸ்.சந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். 70 ஆண்டு கனவு நிறைவேறுமா. இதற்கு வரும், 7ம் தேதி முடிவு தெரியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X