கேரள மக்கள் விரும்பும் 'ஒற்றை தலைமை'

Added : மே 05, 2021
Share
Advertisement
கேரள அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் அதிசயம் நடந்திருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் சந்தித்துக்கொண்டிருக்கும் பொதுவான வீழ்ச்சியும், பினராயி விஜயன் என்ற ஆளுமை மிக்க தனிமனிதனும் தான் இந்த மாற்றத்திற்கான காரணங்கள்.கேரளாவில் ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை காங்கிரஸ் கூட்டணி(யு.டி.எப்.,), மார்க்சிஸ்ட்
Pinarayi Vijayan, Kerala CM, Kerala

கேரள அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஆண்ட கட்சியே மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமரும் அதிசயம் நடந்திருக்கிறது. தேசிய அளவில் காங்கிரஸ் சந்தித்துக்கொண்டிருக்கும் பொதுவான வீழ்ச்சியும், பினராயி விஜயன் என்ற ஆளுமை மிக்க தனிமனிதனும் தான் இந்த மாற்றத்திற்கான காரணங்கள்.

கேரளாவில் ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை காங்கிரஸ் கூட்டணி(யு.டி.எப்.,), மார்க்சிஸ்ட் கூட்டணி(எல்.டி.எப்.,) என மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்வது வழக்கம். ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த பினராயி விஜயன் மீதும், அமைச்சர்கள் மீதும் காங்கிரஸ் பல குற்றச்சாட்டுக்களை எழுப்பியது. சபரிமலையில் வயது பெண்கள் செல்லும் விவகாரத்தில் விஜயன் எடுத்த நடவடிக்கைகளும் விமர்சனத்திற்குள்ளானது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு ஆட்சியை பிடித்து விடலாம் என்று காங்கிரஸ் கருதியது.

ஆனால் அதற்கு நேர்மாறாக கடந்த முறை பெற்றதை விட அதிக தொகுதிகள்(99) பெற்று இமாலய வெற்றி பெற்றுள்ளார் பினராயி விஜயன்.இவரே விடிவெள்ளிகேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி.,யான ராகுல், பலமுறை பிரசாரம் செய்த போதும் கடந்த முறையை விட மோசமாக தோற்று விட்டது அக்கட்சி. இதற்கு காங்கிரஸ் மீது கேரள மக்கள் சமீபகாலமாக கொண்டுள்ள மனோபாவம் காரணம். மாநில காங்கிரஸில் எல்லோரும் தலைவர்கள்; எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் 'மேலிடத்தில்' கேட்கும் சூழ்நிலை.

மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய தனித்துவமாக, துணிச்சலாக, சுயமாக முடிவெடுக்கும் ஒற்றை தலைமை தேவை என்று அவர்கள் உணர்ந்ததன் விளைவு, பினராயி விஜயன் விடிவெள்ளியாய் தெரிகிறார். மார்க்சிஸ்ட் மூத்த தலைவரான பினராயி, அக்கட்சி வழக்கப்படி ஜனநாயக முறைப்படி எல்லாம் முடிவெடுக்க மாட்டார். கட்சியிலும், ஆட்சியிலும் அவரே எல்லாம்; உட்கட்சி ஜனநாயகம் என்பது எல்லாம் அவரை பொறுத்த வரை அவர் எடுக்கும் முடிவே.

இன்று கேரளாவில் ஆட்சியிலும், கட்சியிலும் அவருக்கு அடுத்து இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லை. தோழர்கள் எல்லாம் கூடி சமத்துவமாக முடிவெடுக்கும் வழக்கம் எல்லாம் இல்லை. பினராயி சொன்னால் மற்றவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். காங்கிரஸ் போல் கலகம் ஏற்படுத்த மாட்டார்கள்.


மோடி ஸ்டைல்


இந்த தேர்தலில் பல சீனியர் அமைச்சர்களுக்கு 'சீட்' தரவில்லை; ஏற்கனவே பல சீனியர் தோழர்கள் ஓரங்கட்டப்பட்டு விட்டனர். பொதுவாக சொன்னால் ஏறக்குறைய 'மோடி ஸ்டைல் 'நிர்வாகம். அதனால் கேரள பத்திரிகையாளர்கள் 'வேட்டி கட்டிய மோடி' என்று அவரை கிண்டல் செய்வது உண்டு. இப்படி ஒரு 'ஒற்றை தலைமை ஸ்டைலை' கேரள மக்கள் விரும்புகின்றனர்.

'பினராயி இன்னும் சில நாட்களில் பதவியேற்க உள்ளார். தடுப்பூசியை விலைக்கு வாங்குவது, கொரோனாவுக்கு முழு ஊரடங்கு வேண்டுமா என தீர்மானிப்பது, மத்திய அரசிடம் உரிமைக்குரல் எழுப்புவது என்பதை எல்லாம் அவரால் உடனடியாக தீர்மானிக்க முடியும்; இதுவே காங்கிரஸ் ஜெயித்திருந்தால் முதல்வரை 'மேலிடம்' முடிவு செய்யவே 10 நாள் ஆகும். எந்த கோஷ்டிக்கு அமைச்சரவையில் இடம், முஸ்லிம், கிறிஸ்தவ தலைவர்களிடம் கேட்டு யாருக்கு அமைச்சரவையில் இடம் தருவது என தீர்மானிக்க நாட்கள் ஆகும். அதுவரை இந்த கொரோனா காலத்தில் நிர்வாகம் ஸ்தம்பிக்கும்.

ஏறக்குறைய ஒரு 'சர்வாதிகார மனப்பான்மை' உள்ள தலைவரை தான் கேரள மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு பினராயி விஜயனுக்கு மாற்று இல்லை. எனவே அவரே மீண்டும் தேர்வானார்' என்கின்றனர் கேரள அரசியல் பார்வையாளர்கள். இன்னொரு கோணத்தையும் பார்க்க வேண்டும். இப்போது தேர்தல் நடந்த மாநிலங்கள் எதிலும் காங்கிரசால் ஏதும் சாதிக்க முடியவில்லை.

புதுச்சேரியில் ஆட்சியை இழந்தது. பிரணாப் முகர்ஜி என்ற ஜனாதிபதியை தந்த மேற்கு வங்கத்தில் காங்கிரசின் இடம் எங்கே. மன்மோகன் சிங் என்ற பிரதமர் முன்பெல்லாம் ராஜ்யசபாவிற்கு தேர்வாகும் அசாமில், காங்கிரஸ் எதிர்க்கட்சியாகவே தொடர்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் தி.மு.க., கூட்டணி தயவால் இடங்கள் கிடைத்தன.இப்படிப்பட்ட காங்கிரசிற்கு எதிரான தேசிய அளவிலான உணர்வும், கேரளத்தில் பிரதிபலித்திருக்க கூடும்.

இவை எல்லாம் சேர்ந்து ஆட்சியில் அமரும் காங்கிரஸ் கனவை தகர்த்திருக்கிறது. பினராயி விஜயன் என்ற 'ஒன் மேன் ஆர்மியின்' புண்ணியத்தில் நாட்டில் ஒரு மாநிலத்திலாவது கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர்கிறது.

-நமது நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X