20 சதவீதம் நிரந்தர மூடல்: ஓட்டல் தொழிலுக்கு 'அடி'

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : கொரோனா இரண்டாவது அலையை தடுக்க, அரசு அமல்படுத்திய, 'பொது முடக்கம்' ஓட்டல் தொழிலுக்கு, பலத்த அடியை கொடுத்துள்ளது. 20 சதவீதம் ஓட்டல்கள், நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.க ர்நாடகாவில், பெரிய ஓட்டல்கள், தர்ஷினிகள் உட்பட, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு அளித்துள்ளன.ஆனால் கொரோனா தொற்று,

பெங்களூரு : கொரோனா இரண்டாவது அலையை தடுக்க, அரசு அமல்படுத்திய, 'பொது முடக்கம்' ஓட்டல் தொழிலுக்கு, பலத்த அடியை கொடுத்துள்ளது. 20 சதவீதம் ஓட்டல்கள், நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன.க

ர்நாடகாவில், பெரிய ஓட்டல்கள், தர்ஷினிகள் உட்பட, 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள் உள்ளன. 50 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு அளித்துள்ளன.ஆனால் கொரோனா தொற்று, ஓட்டல் தொழிலுக்கு பலத்த அடி கொடுத்துள்ளது. முந்தைய ஆண்டு, கொரோனாவை தடுக்க, மாதக்கணக்கில் ஊரடங்கு அமலில் இருந்தது.இதன் விளைவாக ஓட்டல்கள், பெரும் நஷ்டத்தை சந்தித்தன. அதன்பின் விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, சூழ்நிலை நிதானமாக இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஆனால், கர்நாடகாவில், கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த, வரும், 12 வரை, பொது முடக்கம் அமல்படுத்தபடுத்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுக்குள் வராததால், பொது முடக்கம் நீட்டிக்கப்படும் வாய்ப்புள்ளது.காலை 6:00 மணி முதல், 10:00 மணி வரை அத்தியாவசிய பொருட்களை வாங்க, அரசு அனுமதியளித்துள்ளது. சில சிறிய ஓட்டல்கள், நான்கு மணி நேரம் திறக்கப்படுகிறது; பார்சல் மட்டும் தரப்படுகிறது.கொரோனாவால், நஷ்டமடைந்ததால், 20 சதவீதம் ஓட்டல்கள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளன. இதனால், 15 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள், வேலையை இழந்துள்ளனர்.

ஓட்டல் தொழிலுக்கு, அரசு உதவ வேண்டுமென, கோரி உள்ளனர்.மாநில ஓட்டல்கள் சங்கத்தலைவர் மதுகர் ஷெட்டி கூறுகையில், ''கொரோனா முதலாவது, இரண்டாவது அலையால், 45 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தொழிலை நிறுத்தியுள்ளன. அதிக நஷ்டத்தை சந்திக்கின்றன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X