பா.ஜ., அரசு திணறல் குமாரசாமி புகார்| Dinamalar

பா.ஜ., அரசு திணறல் குமாரசாமி புகார்

Added : மே 05, 2021
Share
பெங்களூரு : ''கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதில், தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் இறப்பு அதிகரிக்கிறது,'' என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார். பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடின்றி அதிகரிக்கிறது. ஆக்சிஜன் சப்ளையில்லாமல், நோயாளிகள் மூச்சுத்திணறி இறக்கின்றனர்.

பெங்களூரு : ''கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மருத்துவ ஆக்சிஜன் வழங்குவதில், தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் இறப்பு அதிகரிக்கிறது,'' என, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.

பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:கர்நாடகாவில் கொரோனா கட்டுப்பாடின்றி அதிகரிக்கிறது. ஆக்சிஜன் சப்ளையில்லாமல், நோயாளிகள் மூச்சுத்திணறி இறக்கின்றனர். கொரோனா நிர்வகிப்பில், பா.ஜ., அரசு திணறுகிறது. மாநில மக்களை காப்பாற்ற வேண்டும். மாநிலத்திலிருந்து, குஜராத், மஹாராஷ்டிராவுக்கு, ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.எங்களால் ஆக்சிஜன் வழங்க முடியாது என கூறும் தைரியம், பா.ஜ., தலைவர்களுக்கு இல்லை. மாநில சூழ்நிலையை, மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும்.

மார்ச் 15 லிருந்தே, பொது முடக்கம் அமல்படுத்தும்படி, நான் ஆலோசனை கூறினேன். ஆனால் என் பேச்சை, பா.ஜ., அரசு கேட்கவில்லை. கொரோனாவை எப்படி கட்டுப்படுத்துவது என்பதே, அரசுக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X