பொது செய்தி

இந்தியா

100 படுக்கை கொண்ட சிகிச்சை மையம்

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : இந்திய விமான படை, பெங்களூரு பிரிவின் சார்பில், கொரோனா சிகிச்சைக்கு, 100 படுக்கை கொண்ட சிகிச்சை மையம், ஜாலஹள்ளி விமானப்படை நிலையத்தில் அமைக்கப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதால், பெங்களூரு விமானப்படை பிரிவின் சார்பில், இந்திய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய விமானப்படை, பெங்களூரு பிரிவின் சார்பில், கொரோனா சிகிச்சைக்கு, 100 படுக்கை

பெங்களூரு : இந்திய விமான படை, பெங்களூரு பிரிவின் சார்பில், கொரோனா சிகிச்சைக்கு, 100 படுக்கை கொண்ட சிகிச்சை மையம், ஜாலஹள்ளி விமானப்படை நிலையத்தில் அமைக்கப்படுகிறது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைவதால், பெங்களூரு விமானப்படை பிரிவின் சார்பில், இந்திய பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய விமானப்படை, பெங்களூரு பிரிவின் சார்பில், கொரோனா சிகிச்சைக்கு, 100 படுக்கை கொண்ட சிகிச்சை மையத்தை, ஜாலஹள்ளி விமானப்படை நிலையத்தில் அமைக்கிறது.முதற்கட்டமாக, வரும், 6ல், 20 படுக்கை கொண்ட வசதி அமைக்கப்படும்.போதியளவு ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதிப்படுத்தி பின், மீதமுள்ள, 80 படுக்கைகள், வரும், 20ல், அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள, 100 படுக்கைகளில், 10 ஐ.சி.யு., படுக்கைகள்; 40 ஆக்சிஜன் குழாய் பொருத்திய படுக்கைகள்; 50 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர் இயந்திரங்கள் வழங்கப் படுகிறது. இம்மையத்தை, விமானப்படையின் சிறப்பு நிபுணர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ பணியாளர்கள் நிர்வகிக்கின்றனர்.இம்மையத்தில் சிகிச்சைக்காக சேர்வதற்கு, மாநில அரசு மற்றும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் மூலமாக, நோடல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநில அரசின் சார்பில், மருந்து மற்றும் ஆக்சிஜன் தேவைகள் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் மற்றும் மருத்துவ பொருட்களை கொண்டு வருவதில், விமானப்படை முன்னிலை வகித்து, விரைவாக செயல்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X