பொது செய்தி

இந்தியா

கொரோனா பணியாளருக்கு முன்னுரிமை இந்திய மருத்துவ கவுன்சில் வலியுறுத்தல்

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : 'கொரோனா தொற்றை கட்டுப்படுத்தை, இரவு பகலாக போராடும், கொரோனா பணியாளர்களுக்கு, தேவையான மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்க வேண்டும்' என, இந்திய மருத்துவ கவுன்சில் கோரியுள்ளது. இந்திய மருத்துவ கவுன்சிலின், பெங்களூரு பொது தொடர்பு அதிகாரி சீனிவாஸ் கூறியதாவது:பெங்களூரின் வக்கீல்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, தேவையான மருத்துவ வசதிகள்

பெங்களூரு : 'கொரோனா தொற்றை கட்டுப்படுத்தை, இரவு பகலாக போராடும், கொரோனா பணியாளர்களுக்கு, தேவையான மருத்துவ பாதுகாப்பு கருவிகளை வழங்க வேண்டும்' என, இந்திய மருத்துவ கவுன்சில் கோரியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலின், பெங்களூரு பொது தொடர்பு அதிகாரி சீனிவாஸ் கூறியதாவது:பெங்களூரின் வக்கீல்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு, தேவையான மருத்துவ வசதிகள் கிடைக்கிறதா என்பதை ஆய்வு செய்ய, நோடல் அதிகாரியை, மாநகராட்சி நியமித்துள்ளது.ஆனால், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உட்பட, மற்ற கொரோனா பணியாளர்களுக்கு, எந்த வசதியும் செய்யவில்லை.கொரோனா தொற்று ஏற்பட்ட டாக்டர்களுக்கு, படுக்கைகள் ஒதுக்க வேண்டும். கொரோனா பரவுவதால், டாக்டர்களின் உயிர் அபாயத்தில் உள்ளது.

அவர்கள் சிகிச்சை பெற, படுக்கைக்காக, அலையும் சூழ்நிலை உருவாகக்கூடாது. ஒவ்வொரு மாவட்டத்திலும், டாக்டர்களுக்காக பத்து படுக்கைகள் ஒதுக்க வேண்டும்.சமீபத்தில் நடந்த மருத்துவ கவுன்சில், செயற்குழு கூட்டத்திலும், ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா முதல் அலையில், மாநிலம் முழுவதும், 60 டாக்டர்கள், இரண்டாவது அலையில், ஐந்து டாக்டர்கள் இறந்தனர்.பெங்களூரு உட்பட, பல இடங்களில் படுக்கைகள் கிடைக்காததால், சில டாக்டர்களை, கொரோனாவால் இழந்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X