பொது செய்தி

இந்தியா

தட்சிண கன்னட மாவட்டத்தில், பரவலாக மழை

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : தட்சிண கன்னட மாவட்டத்தில், பரவலாக மழை பெய்தது. பெல்தங்கடியில் தடுப்புச்சுவர் உடைந்ததில், பெரும் சேதம் ஏற்பட்டது. தட்சிண கன்னட மாவட்டத்தின், பல இடங்களில் நேற்று முன் தினம் இரவு, பரவலாக மழை பெய்தது.பெல்தங்கடி, புத்துார், சுள்யா தாலுகா உட்பட, பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து, மூன்று மணி நேரம் பெய்ததால், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது.தாழ்வான

பெங்களூரு : தட்சிண கன்னட மாவட்டத்தில், பரவலாக மழை பெய்தது. பெல்தங்கடியில் தடுப்புச்சுவர் உடைந்ததில், பெரும் சேதம் ஏற்பட்டது.

தட்சிண கன்னட மாவட்டத்தின், பல இடங்களில் நேற்று முன் தினம் இரவு, பரவலாக மழை பெய்தது.பெல்தங்கடி, புத்துார், சுள்யா தாலுகா உட்பட, பல இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து, மூன்று மணி நேரம் பெய்ததால், ஆறு, ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது.தாழ்வான பகுதிகளில், வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெல்தங்கடி தாலுகா, கேருகட்டே சம்போள்யா என்ற இடத்தில், தடுப்புச்சுவர் இடிந்ததில், விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து, பயிர்கள் பாழானது. பாக்கு தோட்டம் சேதமடைந்தது.காற்று, மழைக்கு பெல்தங்கடி தாலுகாவிலேயே, 500 க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் முறிந்து விழுந்தது. சில இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

இத்தாலுகாவின் தர்மஸ்தலா, முன்டாஜி, சார்மாடி, மலவந்திகே, குருவாயனகரே, படங்கடி உட்பட, பல்வேறு இடங்களில், காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.தட்சிண கன்னட மாவட்டத்தின், கிராமப்பகுதிகளில், ஒரு வாரமாக தொடர் மழை பெய்வதால், வறண்டு கிடந்த ஆறுகள், ஏரிகள் நிரம்பி களை கட்டியுள்ளதால், கிராமத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X