அரசு மருத்துவமனையில், 3 டாக்டர்கள், ஊழியர்கள் என 17 பேருக்கு கொரோனா

Added : மே 05, 2021
Share
Advertisement
பங்கார்பேட்டை : பங்கார்பேட்டை அரசு மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள், ஊழியர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. @Image@ பங்கார்பேட்டையில், பல கோடி ரூபாய் செலவில், 200 படுக்கை கொண்ட, அரசு மருத்துவமனை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறந்தனர். தினமும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள், 14

பங்கார்பேட்டை : பங்கார்பேட்டை அரசு மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள், ஊழியர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.



பங்கார்பேட்டையில், பல கோடி ரூபாய் செலவில், 200 படுக்கை கொண்ட, அரசு மருத்துவமனை, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திறந்தனர். தினமும், 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், இந்த மருத்துவமனையில், மூன்று டாக்டர்கள், 14 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது. இவர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.இதனை அறிந்தவர்கள், சிகிச்சை பெற மருத்துவமனைக்கு செல்ல பயப்படுகின்றனர். பங்கார்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.மாவட்ட மருத்துவ அதிகாரி விஜயகுமார் கூறுகையில், ''டாக்டர்கள், ஊழியர்கள் 17 பேருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.''இவர்கள், தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு டாக்டர்கள் புண்ணிய மூர்த்தி, சரஸ்வதி ஆகியோர் சிகிச்சை அளித்து வருகின்றனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X