பொது செய்தி

இந்தியா

முக கவசம்: தலைமை கமிஷனர் அன்பு கட்டளை

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : "பெங்களூரில் கொரோனா தொற்றை அழிக்கும் முயற்சியில், வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த தொற்றுக்கும், முக கவசம் மட்டுமே பாதுகாப்பு கவசம். ஒவ்வொருவரும், தவறாமல் முக கவசம் அணியுங்கள்," என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். தனியாக அமர்ந்து உணவு

பெங்களூரு : "பெங்களூரில் கொரோனா தொற்றை அழிக்கும் முயற்சியில், வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த தொற்றுக்கும், முக கவசம் மட்டுமே பாதுகாப்பு கவசம். ஒவ்வொருவரும், தவறாமல் முக கவசம் அணியுங்கள்," என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:அனைவரும் முக கவசம் அணிவது அவசியம். தனியாக அமர்ந்து உணவு சாப்பிட்ட பின், உடனடியாக முக கவசம் அணிய வேண்டும். இதனால் கொரோனாவிலிருந்து தப்பலாம்.சில சிறிய மருத்துவமனைகளில் மட்டுமே, ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. எனவே, ஆக்சிஜன் தேவைக்கு தக்கபடி, கொரோனா நோயாளிகளை சேர்க்கும்படி, தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆக்சிஜன் வினியோகிக்கும், ரீபில்லிங் மையங்களில், எங்களின் ஊழியர்கள் நியமிக்கப்படுவர்.

மருத்துவமனைகளில், ஆக்சிஜன் இருப்பு தொடர்பாக, இன்றிலிருந்தே ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம்.பெங்களூரில் கொரோனா தொற்றை அழிக்கும் முயற்சியில், வல்லுனர்கள் ஈடுபட்டுள்ளனர். எந்த தொற்றுக்கும், முக கவசம் மட்டுமே பாதுகாப்பு கவசம். ஒவ்வொருவரும், தவறாமல் முக கவசம் அணியுங்கள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X