பொது செய்தி

இந்தியா

வீட்டு தனிமையில் உரிய சிகிச்சை

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கொரோனா சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறவதற்கான உதவி எண் இணைப்பு அழைப்புகளை பலப்படுத்த வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார். கொரோனா தடுப்பு பணிக்குழுத் தலைவராக, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுடன், பெங்களூரில் நேற்று கூட்டம்

பெங்களூரு : ''கொரோனா சிகிச்சை மற்றும் ஆலோசனை பெறவதற்கான உதவி எண் இணைப்பு அழைப்புகளை பலப்படுத்த வேண்டும்,'' என, அதிகாரிகளுக்கு துணை முதல்வர் அஸ்வத் நாராயணா உத்தரவிட்டார்.

கொரோனா தடுப்பு பணிக்குழுத் தலைவராக, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகளுடன், பெங்களூரில் நேற்று கூட்டம் நடத்தினார்.கூட்டத்தில், அவர் பேசியதாவது: கொரோனா உதவி எண்களை சரி செய்வதால் மட்டுமே, அனைத்து அழைப்புகளையும் பெற முடியும். தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் மூலமாக, தொலைபேசி இணைப்புகளை பலப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன் மூலமாக, உதவி எண் இணைப்புகளில் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்க முடியும்.

தற்போது, படுக்கைகள் கிடைப்பதில் தட்டுபாடு ஏற்படுகிறது. படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதை வெளிப்படையான முறையிலும் செயல்படுத்த வேண்டும்.கொரோனா நோயாளிகள், சேர்க்கை; அவர்களுக்கான படுக்கை ஒதுக்கீடு; குணமடைந்து திரும்புவது உள்ளிட்ட அனைத்து பதிவுகளும், தானியங்கியாக மாற்றப்பட வேண்டும்.தற்போது, ஒவ்வொரு துறையாக பிரித்து பிரித்து, கொரோனா பதிவுகள் வழங்கப்படுகின்றன.1912, ஆப்தமித்ரா, முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை மருத்துவமனைகள், மண்டல அளவிலான மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோர், 104, 108 என, பல்வேறு பிரிவுகளில் கொரோனா சிகிச்சைப்பணிகள் நடக்கிறது.

ஆனால், அதிலிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பதிவுகள் ஒருங்கிணைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. உடனடியாக, அனைத்தும் ஒரு செயலி மூலமாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.கொரோனா பாதிக்கப்பட்ட, 92 சதவீதத்தினர், வீட்டில் தனிமைப்படுத்தி, மருத்துவர் ஆலோசனைப்படி குணமடைகின்றனர். எட்டு சதவீதம் பேருக்கு மட்டுமே, மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது.தனிமைப்படுத்தப்படுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது தவறும் பட்சத்தில், மோசமான சூழல் உருவாகிறது. இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த, அரசு தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க தயாராக உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X