உயிருடன் இருப்பவர் இறப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
பெலகாவி : உயிருடன் உள்ள கொரோனா நோயாளியை, இறந்ததாக அறிவித்தது மட்டுமின்றி, வேறொருவர் உடலை கொடுத்து, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், குளறுபடி செய்துள்ளனர். பெலகாவி மாவட்டம், அதானி தாலுகா, மோலே கிராமத்தை சேர்ந்த பயப்பா சத்யப்பா ஹலகலி என்பவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, மே 1ல், பெலகாவியின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மறுநாள் காலை, அவர் இறந்ததாக

பெலகாவி : உயிருடன் உள்ள கொரோனா நோயாளியை, இறந்ததாக அறிவித்தது மட்டுமின்றி, வேறொருவர் உடலை கொடுத்து, தனியார் மருத்துவமனை ஊழியர்கள், குளறுபடி செய்துள்ளனர்.

பெலகாவி மாவட்டம், அதானி தாலுகா, மோலே கிராமத்தை சேர்ந்த பயப்பா சத்யப்பா ஹலகலி என்பவருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டு, மே 1ல், பெலகாவியின் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மறுநாள் காலை, அவர் இறந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் அறிவித்தனர். முகம் தெரியாமல் மூடப்பட்ட உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.அவர்களும் முகத்தை பார்த்து, உறுதி செய்து கொள்ளாமல், அரசு விதித்த கொரோனா விதிமுறைப்படி, அன்று மாலை தகனம் செய்தனர்.தகனம் முடிந்த, சில மணி நேரத்துக்கு பின், பயப்பா சத்யப்பா ஹலகலியிடமிருந்து, குடும்பத்தினருக்கு போன் வந்தது.ஆச்சரியமடைந்த அவர்கள், மருத்துவமனைக்கு சென்று விசாரித்த போது, அவர் உயிருடன் இருப்பதும், வேறொருவர் உடலை, மாற்றி கொடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் குளறுபடி செய்ததும் தெரிந்தது.

அதன்பின், தகனம் செய்யப்பட்ட நபரின் மகன், அஸ்தியை பெறுவதற்காக, மோலே கிராமத்துக்கு வந்தார். மருத்துவமனை குளறுபடி பற்றி, காக்வாட் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.இதையடுத்து அதானி தாசில்தார் உட்பட, போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில், இறந்த நபரின் அஸ்தி, மகனிடம் ஒப்படைக்கப்பட்டது.இரண்டு நோயாளிகள், ஒரே பெயரில் இருந்ததாலும், ஒரே நாளன்று மருத்துவமனையில் சேர்ந்ததாலும், இப்பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X