பொது செய்தி

இந்தியா

மே 22 வரை 'பொது முடக்கம்'

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''கொரோனா தொற்று, கட்டுக்குள் வராததால், மே 22 வரை 'பொது முடக்கம்' நீட்டிக்கப்படும். பத்திரிகையாளர்கள், கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்,'' என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். கர்நாடகாவில், கொரோனா சூழ்நிலை, ஆக்சிஜன் வினியோகம் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா தலைமையில், அமைச்சரவை கூட்டம், நேற்று மாலை நடந்தது.கொரோனாவை கட்டுப்படுத்த,

பெங்களூரு : ''கொரோனா தொற்று, கட்டுக்குள் வராததால், மே 22 வரை 'பொது முடக்கம்' நீட்டிக்கப்படும். பத்திரிகையாளர்கள், கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்,'' என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

கர்நாடகாவில், கொரோனா சூழ்நிலை, ஆக்சிஜன் வினியோகம் தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா தலைமையில், அமைச்சரவை கூட்டம், நேற்று மாலை நடந்தது.கொரோனாவை கட்டுப்படுத்த, வரும், 11 வரை அமலில் உள்ள முழு ஊரடங்கை, மேலும் நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக, முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:இரண்டு வாரங்கள், பொது முடக்கம் அமல்படுத்தியும், கொரோனா கட்டுக்குள் வரவில்லை. எனவே, மே, 22 வரை, பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில், கொரோனா தொடர்பான பிரச்னைகளுக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள் தீர்வு காண வேண்டும்.மருத்துவ ஆக்சிஜன் வசதி செய்யும் பொறுப்பு, அமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ரெம்டெசிவிர் ஊசி மருந்துகளை, வினியோகிக்கும் பொறுப்பை, துணை முதல்வர் அஸ்வத் நாராயணா ஏற்கவுள்ளார்.மருத்துவமனைகளுக்கு, படுக்கைகள் ஏற்பாடு செய்யும் பொறுப்பை, அமைச்சர் அசோக் பார்த்துக்கொள்வார்.அதே போன்று, அமைச்சர்கள் அரவிந்த் லிம்பாவளி, பசவராஜ் பொம்மைக்கும், சில பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.பத்திரிகையாளர்களை, கொரோனா முன்கள பணியாளர்களாக அறிவிக்க, முடிவு செய்யப்பட்டுஉள்ளது.சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், நடந்த சம்பவத்துக்கு, நான் வருந்துகிறேன். இச்சம்பவம் தொடர்பாக, விசாரணை நடத்தி, மூன்று நாட்களில் அறிக்கையளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்.மஹாராஷ்டிராவில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைவதால், ஜிந்தால் நிறுவனம் உற்பத்தி செய்யும், மருத்துவ ஆக்சிஜன், நம் மாநிலத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. இது குறித்து மத்திய அரசிடம், வேண்டு கோள் விடுக்கப்படும்.படுக்கைகளை மறைத்த முறைகேடு குறித்து, எம்.பி., தேஜஸ்வி சூர்யா, வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இம்முறைகேட்டில் தொடர்புள்ளோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு, இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள் பயன்படுத்தப்படுவர். கூடுதல் ஊழியர்களை நியமிக்க, முடிவு செய்துள்ளோம்.எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, தேவையான ஆலோசனை கூறினால், ஏற்க தயாராக இருக்கிறோம்.மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், இன்றே அவரவர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும். அங்கேயே இருந்து சூழ்நிலையை சரி செய்ய வேண்டும். இது குறித்து கூட்டத்தில், அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X