2 வது டோஸ் தடுப்பூசிக்கு தாமதமானால் பீதி வேண்டாம் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

'2 வது டோஸ் தடுப்பூசிக்கு தாமதமானால் பீதி வேண்டாம்' 

Added : மே 05, 2021
Share
பெங்களூரு : 'பெங்களூரில் முதல் டோஸ், கொரோனா தடுப்பூசி பெற்றுள்ள, 45 வயதுக்கு மேற்பட்டோர், இரண்டாவது டோஸ் பெறுவதற்கு தாமதமானாலும் பரவாயில்லை' என, மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெங்களூரில் ஒரு பக்கம், கொரோனா நோயாளிகள், சிகிச்சைக்கு படுக்கை, ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். மற்றொரு பக்கம், கொரோனா தடுப்பூசி கிடைக்காமல், அவதிப்படுகின்றனர்.அரசின்

பெங்களூரு : 'பெங்களூரில் முதல் டோஸ், கொரோனா தடுப்பூசி பெற்றுள்ள, 45 வயதுக்கு மேற்பட்டோர், இரண்டாவது டோஸ் பெறுவதற்கு தாமதமானாலும் பரவாயில்லை' என, மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் ஒரு பக்கம், கொரோனா நோயாளிகள், சிகிச்சைக்கு படுக்கை, ஆக்சிஜன் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். மற்றொரு பக்கம், கொரோனா தடுப்பூசி கிடைக்காமல், அவதிப்படுகின்றனர்.அரசின் உத்தரவுபடி, 45 வயதுக்கு மேற்பட்ட பலர், முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், இரண்டாம் டோஸ் பெற்றாக வேண்டும். ஆனால், தடுப்பூசி கிடைப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.அரசு மருத்துவ மனைகளில், கொரோனா தடுப்பூசி காலியாகி விட்டது. அதிக பணம் கொடுத்து, தனியார் மருத்துவமனைகளில், தடுப்பூசி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிக பணம் கொடுக்க, தயாராக இருந்தாலும், தடுப்பூசி கிடைப்பதில்லை. ஏற்கனவே, முதல் டோஸ் பெற்றவர்கள், இரண்டாம் டோஸ் தடுப்பூசி பெற முடியாததால், தங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு, பாதிப்பு வருமோ என, பீதியடைந்துள்ளனர்.மருத்துவ வல்லுனர்கள் கூறியதாவது:முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸ் பெற, சிறிது தாமதமானால் எந்த பாதிப்பும் ஏற்படாது.'கோவாக்சின்' நான்கு வார இடைவெளியில், இரண்டாவது டோஸ் பெற வேண்டும்.

'கோவிஷீல்டு' என்றால், முதல் டோஸ் பெற்ற, ஆறு முதல் எட்டு வாரத்துக்குள், இரண்டாவது டோஸ் பெற வேண்டும்.இதில் சில நாட்கள் தாமதமானாலும், பிரச்னை இல்லை. மக்கள் பயப்பட தேவையில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X