தற்காலிக இடுகாடால் வீட்டை காலி செய்யும் மக்கள்

Added : மே 05, 2021
Share
Advertisement
பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி, பொது மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மாவள்ளிபுராவில், தற்காலிக இடுகாடு அமைத்துள்ளதால், பலரும் வீட்டை காலி செய்து செல்கின்றனர். பெங்களூரில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நகரின் சாம்ராஜ்பேட், பனசங்கரி உட்பட, பல இடங்களில் உள்ள இடுகாடுகளுக்கு, அழுத்தம் அதிகரித்துள்ளது.எனவே, புறநகரின் மாவள்ளிபுராவில்,

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி, பொது மக்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், மாவள்ளிபுராவில், தற்காலிக இடுகாடு அமைத்துள்ளதால், பலரும் வீட்டை காலி செய்து செல்கின்றனர்.

பெங்களூரில், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நகரின் சாம்ராஜ்பேட், பனசங்கரி உட்பட, பல இடங்களில் உள்ள இடுகாடுகளுக்கு, அழுத்தம் அதிகரித்துள்ளது.எனவே, புறநகரின் மாவள்ளிபுராவில், தற்காலிக இடுகாடு அமைக்க, பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டது.இதற்கு, மாவள்ளிபுரா மற்றும் அதன் சுற்றுப்புற கிராமத்தினர், எதிர்ப்பு தெரிவித்து, ஆறேழு நாட்களாக போராட்டம் நடத்தினர். அதை பொருட்படுத்தாத மாநகராட்சி, போலீஸ் பாதுகாப்பில் இடுகாடு அமைத்துள்ளது.இரண்டு இடங்களில், 32 உடல்களை எரிக்க, ஏற்பாடு செய்கின்றனர்.

இரும்பு ஸ்டாண்டுகள், விறகுகள் வசதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.தங்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு வரும் என கருதி, பலரும் வீட்டையே காலி செய்து, வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.மாநகராட்சிக்கு சொந்தமான, மாவள்ளிபுரா இடம், 2012 வரை, குப்பை கொட்ட பயன்படுத்தப்பட்டது.சுற்றுப்புற கிராமங்களில் நோய் பரவியதால், அப்பகுதியினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.நீதிமன்றமும், அங்கு, குப்பை கொட்டக்கூடாது என, உத்தரவிட்டிருந்தது.எனவே, எட்டு ஆண்டுகளாக இடம் காலியாக விடப்பட்டது.தற்போது, கொரோனா இறப்புகள் அதிகரிப்பதால், தற்காலிக மயானம் அமைக்க, மாநகராட்சி முன் வந்துள்ளது. இது, நீதிமன்ற உத்தரவு மீறல் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X