பொது செய்தி

இந்தியா

'லேசான கொரோனா அறிகுறிக்கு சி.டி., ஸ்கேன் ஏன்?'

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : ''சாதாரண கொரோனா அறிகுறிக்கு, 'சி.டி.,ஸ்கேன்' சோதனை செய்ய தேவையில்லை,'' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: ஏராளமானோர், கொரோனா பரிசோதனை யில், 'பாசிட்டிவ்' என, வந்த உடன், சி.டி., ஸ்கேன் எடுக்க ஓடுகின்றனர். பாசிட்டிவ் என வந்தாலும், அது மிதமான பாதிப்பு
CT scan, AIIMS, Corona Virus, Covid 19, India Fights Corona

புதுடில்லி : ''சாதாரண கொரோனா அறிகுறிக்கு, 'சி.டி.,ஸ்கேன்' சோதனை செய்ய தேவையில்லை,'' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறியதாவது: ஏராளமானோர், கொரோனா பரிசோதனை யில், 'பாசிட்டிவ்' என, வந்த உடன், சி.டி., ஸ்கேன் எடுக்க ஓடுகின்றனர். பாசிட்டிவ் என வந்தாலும், அது மிதமான பாதிப்பு எனில், சி.டி., ஸ்கேன் சோதனை செய்ய தேவையில்லை. 'எக்ஸ்ரே' போதும். கொரோனா அறிகுறி இல்லாதோருக்கு, நுரையீரலில் லேசான பாதிப்பு இருந்தாலும், அது சிகிச்சையின்றி குணமாகி விடும்.


latest tamil news



மிதமான பாதிப்புக்கு ஆளானோர், ஆக்சிஜன் அளவு நன்றாக இருக்கும் பட்சத்தில், வீட்டில் தனிமையில் இருந்து, மருந்து, மாத்திரைகள் மூலம் குணமடையலாம். அவர்கள், சி.டி.,ஸ்கேன் சோதனை செய்ய தேவையில்லை. இளைஞர்கள், தேவையின்றி அடிக்கடி, சி.டி.,ஸ்கேன் எடுப்பதால், பிற்காலத்தில் புற்றுநோய் பாதிப்பிற்கு ஆளாகும் ஆபத்து உள்ளதாக, சர்வதேச அணுசக்தி ஆணையம் எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கும் பகுதிகளில் முழு ஊரடங்கையும், கடுமையான கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
06-மே-202110:09:32 IST Report Abuse
suresh sridharan தேவையில்லாமல் சி டி ஸ்கேன் செய்து கொள்ளாதீர்கள் கேன்சர் வரும் அவர்களுக்குப் பணம் உங்களுக்கு வியாதி
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
05-மே-202119:38:14 IST Report Abuse
தமிழ்வேள் ஒருநாள், டிரைவிங் லைசென்ஸ் , பாஸ்போர்ட் வங்கி கணக்கு துவக்கல் ஏன் சாதாரண ரயில் பஸ் பயணத்துக்கு கூட சி ட்டி ஸ்கென் ரிப்போர்ட் கேட்பார்கள் ......வியாபார பார்ட்னர்கள் அரசியல்வாதிகளும் ஆளுங்கட்சி ஆட்களும் ஆனதால் இப்படி ...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
05-மே-202109:26:30 IST Report Abuse
sahayadhas எல்லாம் சரிதான். 50 லட்சம் செவ வழித்து படிப்பு, 50 கோடி செலவில் மருத்துவமனை .இது குறையாமல் அது மட்டும் குறைக்க நினைப்பது நியாயமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X