ஆத்தூர் பேரூராட்சி கழிவு; மேலாண்மையில் அலட்சியம்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆத்துார் : ஆத்துாரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தியும் தெருக்களில் சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது.தனிநபர், வணிக நிறுவன கழிவுகளும் நகரில் கண்ட கண்ட இடங்களில் குவிக்கப்படுகிறது. மெயின்ரோடு, சவேரியார் தெரு, காலனி, மாணவர் விடுதி, சார்பதிவாளர் அலுவலகம், மாலையகவுண்டன்பட்டி ரோடு பகுதிகளில், குப்பைக் குவியலால் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.பணியாளர்களால்

ஆத்துார் : ஆத்துாரில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தியும் தெருக்களில் சுகாதாரமற்ற நிலை நீடிக்கிறது.

தனிநபர், வணிக நிறுவன கழிவுகளும் நகரில் கண்ட கண்ட இடங்களில் குவிக்கப்படுகிறது. மெயின்ரோடு, சவேரியார் தெரு, காலனி, மாணவர் விடுதி, சார்பதிவாளர் அலுவலகம், மாலையகவுண்டன்பட்டி ரோடு பகுதிகளில், குப்பைக் குவியலால் தெருநாய் தொல்லை அதிகரித்துள்ளது.பணியாளர்களால் சேகரிக்கப்படும் கழிவுகள், முறையாக திடக்கழிவு மேலாண்மைக்கு அனுப்பப் படுவதில்லை.

மாலையகவுண்டன்பட்டி ரோடு, அக்கரைப்பட்டி ரோடு பகுதிகளில் தீயிட்டு எரிப்பதால், குடியிருப்போர் மட்டுமின்றி வாகனங்களில் செல்வோரும் பாதிப்படைகின்றனர்.

இப்பகுதியினர் கூறுகையில், ''பள்ளிவாசல் தெருவில், மழைக்காலங்களில் தண்ணீருடன் கழிவுநீரும் தேங்குகிறது. தொகுப்பு கழிவறைகள் இருந்தும், திறந்தவெளி பயன்பாடே அதிகம் உள்ளது. சுகாதாரம் காக்கும் நடவடிக்கையை, ஊரக வளர்ச்சித்துறையினர் கண்காணிக்க வேண்டும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X