மலைப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு

Added : மே 05, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என கருதப்பட்டது. இங்குள்ள 15 ஊராட்சிகளில் வனத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள், கிணறு ஆழ்துளை மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கோடை மழை சில வாரங்களுக்கு முன் பெய்த போதும் ஆங்காங்கே

கொடைக்கானல் : கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதியில் குடிநீர்ப் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.

நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்ததால் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பில்லை என கருதப்பட்டது. இங்குள்ள 15 ஊராட்சிகளில் வனத்தில் உள்ள குடிநீர் ஆதாரங்கள், கிணறு ஆழ்துளை மூலமே குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கோடை மழை சில வாரங்களுக்கு முன் பெய்த போதும் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோடை வெயில் உக்கிரத்தால் மலைப்பகுதியில் குடிநீர் ஆதாரங்களில் நீர்மட்டம் சரிந்து உள்ளது.

பொதுமக்கள் தேவைக்கு வெகு தொலைவில் சென்று தண்ணீர் எடுக்கும் அவலம் உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ள சூழலில் குடிநீர் தொட்டிகள், நீராதாரங்கள் பராமரிப்பு இன்றி நிலையில் சுகாதாரக் கேடுடன் சப்ளை செய்வதாக பொதுமக்கள் புலம்புகின்றனர். ஊராட்சிகளில் நீடிக்கும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X