பொது செய்தி

தமிழ்நாடு

சூட்டை தணிக்கும் முலாம் பழம்; கிலோ ரூ.25

Added : மே 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் முலாம் பழம் சீசன் களைக்கட்டியுள்ளதால், ஒரு கிலோ ரூ.25 க்கு விற்பனையாகிறது.கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மிரட்டி வருகிறது. பகலில் வெளியே வர முடியாதபடி அனல் காற்று வீசுகிறது. சூட்டை தணிக்க மக்கள் இளநீர், சர்பத், உள்ளிட்ட குளிர்பானங்களை பருககின்றனர்.நேற்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க திருவண்ணாமலை,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் முலாம் பழம் சீசன் களைக்கட்டியுள்ளதால், ஒரு கிலோ ரூ.25 க்கு விற்பனையாகிறது.

கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மிரட்டி வருகிறது. பகலில் வெளியே வர முடியாதபடி அனல் காற்று வீசுகிறது. சூட்டை தணிக்க மக்கள் இளநீர், சர்பத், உள்ளிட்ட குளிர்பானங்களை பருககின்றனர்.நேற்று முதல் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ளது. கோடை வெயிலை சமாளிக்க திருவண்ணாமலை, பெங்களூரில் இருந்து முலாம் பழம் அதிகளவில் விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளது. பழக்கடைகள் மட்டுமின்றி ரோட்டோர தள்ளுவண்டி கடைகளிலும் முலாம் பழம் விற்பனை களைக்கட்டியுள்ளது.

முலாம் பழத்தில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து அதிகளவில் உள்ளது. உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீரக பிரச்னைக்கு சிறந்தது. இதனால் முலாம் பழத்திற்கு நல்ல மவுசு உள்ளது.கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.40 க்கு விற்றது. தற்போது வரத்து அதிகரிப்பால் ரூ.25 க்கு விற்பனையாகிறது. இதே போல் நீர்ச்சத்து அதிகமுள்ள பன்னீர் திராட்சை வரத்து குறைவால் விலை அதிகரித்து கிலோ ரூ.90 க்கும், பச்சை திராட்சை ரூ.100 க்கும் விற்பனையாகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X