பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரிசோதனைகள் முடிவு இனி இணையவழியில்

Added : மே 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் அதன் முடிவுகளை இனி இணைய வழியில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் முடிவு வழங்கப்படுகிறது.பரிசோதனை செய்யும் நோயாளிகள், முடிவுகளை தெரிந்து கொள்ள

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வோர் அதன் முடிவுகளை இனி இணைய வழியில் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆர்.டி.பி.சி.ஆர்., கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகள் சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்தில் முடிவு வழங்கப்படுகிறது.பரிசோதனை செய்யும் நோயாளிகள், முடிவுகளை தெரிந்து கொள்ள அந்தந்த மருத்துவமனை ஆய்வகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், இணைய வழியில் முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. http://dmchcovid19reports.in என்ற முகவரியில், பரிசோதனை எண் அல்லது அலைபேசி எண்ணை பதிவு செய்தால் வீட்டிலிருந்தபடி முடிவுகளை பதிவிறக்கம் செய்யலாம்.

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி டீன் விஜயகுமார் கூறியதாவது,பரிசோதனைக்கு வருவோரால் நெரிசல் ஏற்படுவதோடு, தடுப்பு விதிகளை அமல்படுத்துவதிலும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் பரிசோதனை முடிவுகளை இணையத்தில் அறிந்து, பதிவிறக்கம் செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பின்பற்றுவதால் கூட்டம் கூடுவதையும், அலைச்சலையும் தவிர்க்கலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X