இந்தியா

கவர்னருடன் ரங்கசாமி சந்திப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

Added : மே 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ள என்.ஆர் காங்.,தலைவர் ரங்கசாமி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.நடந்து முடிந்த 15-வது புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர் காங்., 10 இடங்களிலும் பா.ஜ.,6 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி
 கவர்னருடன் ரங்கசாமி சந்திப்பு; ஆட்சி அமைக்க உரிமை கோரினார்

புதுச்சேரி : புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வர் பொறுப்பேற்க உள்ள என்.ஆர் காங்.,தலைவர் ரங்கசாமி கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களுடன் கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

நடந்து முடிந்த 15-வது புதுச்சேரி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 30 தொகுதிகளில் என்.ஆர் காங்., 10 இடங்களிலும் பா.ஜ.,6 இடங்களில் இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மையுள்ள சூழ்நிலையில், நேற்று சட்டசபை தேர்தலில் வெற்றிப் பெற்ற 10 என்.ஆர் காங்., எம்.எல்.ஏ.,க்ககள் ஆலோசனை கூட்டம் கோரிமேடு அப்பா பைத்திய சுவாமி கோவிலில் என்.ஆர் காங்.,தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், முதல்வராக என்.ஆர் காங்., தலைவர் ரங்கசாமி ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பா.ஜ.,கட்சி அலுவலகத்தில் நடந்த பா.ஜ., எம்.எல்.ஏக்கள் கூட்டத்திலும் முதல்வராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்


கவர்னரிடம் உரிமை கோரல்:


புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரி, நேற்று மாலை 6.30 மணியளவில் இரு கட்சி எம்.எல்.ஏக்களுடன் கவர்னர் தமிழிசை சவுந்திர ராஜனை என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி சந்தித்து பேசினார். அப்போது ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மை இடங்களான 16 இடங்களின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வராக என்னை தேர்வு செய்துள்ளனர்.

எனவே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வேண்டும் என உரிமை கோரினார். ஆட்சிக்கான உரிமை கோர கடிதத்தை பெற்றுக் கொண்டு தமிழிசை சவுந்திரராஜன் புதிய அரசு பதவி ஏற்க கேட்கும் தேதியில் பதவி பிரமாணம் செய்து வைக்கப்படும். நல்ல நேரம் பார்த்து சொல்வதாக ரங்கசாமி கூறியுள்ளார். அவர் சொல்லும் தேதியில் பதவி பிரமாணம் செய்யப்படும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X