பொது செய்தி

தமிழ்நாடு

போலி சித்தா மருந்து புழக்கத்தில் உள்ளதா

Added : மே 05, 2021
Share
Advertisement
செம்பட்டி : சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் போலி மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் இலவச தடுப்பூசி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பக்க விளைவுகள் இல்லாத சித்த, ஆயுர்வேத மருந்துகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.டெங்கு தடுப்பில் நிலவேம்பு போன்று,

செம்பட்டி : சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் போலி மருந்துகள் புழக்கத்தில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் மட்டுமன்றி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் இலவச தடுப்பூசி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் பக்க விளைவுகள் இல்லாத சித்த, ஆயுர்வேத மருந்துகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.டெங்கு தடுப்பில் நிலவேம்பு போன்று, தற்போது கபசுர குடிநீரை சுகாதாரத்துறை பரிந்துரைக்கிறது. கபசுர குடிநீர், நெல்லி லேகியம் உள்ளிட்ட இயற்கை மருந்துகள் விற்பனை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி போலி மருந்துகள், தரமற்ற முகக்கவசம் விற்பனையில் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.மத்திய அரசின் ஆயுர்வேத மருத்துவ பிரிவு மட்டுமின்றி, சுகாதாரத்துறையும் மருந்து கடைகளின் விற்பனையை கண்காணிக்க முன்வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X