இந்தியா

ஜிப்மரில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் உயர்வு

Added : மே 05, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ஜிப்மரில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 229ல் இருந்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.அவரது செய்திக் குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் மற்றும் உயர் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர தொற்றால், மிகவும் கவலைக்கிடமான நிலையில்

புதுச்சேரி : ஜிப்மரில் கொரோனா சிகிச்சைக்கான படுக்கைகள் 229ல் இருந்து 400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, என மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக் குறிப்பு:ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படும் கொரோனா நோயாளிகளில் ஆக்சிஜன் மற்றும் உயர் தீவிர சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தீவிர தொற்றால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூச்சுத்திணறலுடன் வரும் கொரோனா நோயாளிகள் மீது ஜிப்மர் அதிக கவனம் செலுத்துகிறது.கடந்த 3 வாரங்களுக்கு முன் கொரோனா நோயாளிகளுக்காக இருந்த 229 படுக்கைகள், தற்போது 400 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கை 35 லிருந்து 61 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்காக மேலும் 75 படுக்கைகளை போர்க்கால அடிப்படையில் உயர்த்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. தீவிர மற்றும் அதி தீவிர நோயாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருவதால், தீவிர சிகிச்சை அளிக்க கூடிய மருத்துவ பணியாளர்களின் தேவையும் மிகவும் அதிகரித்துள்ளது.

ஜிப்மரில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்ற பணியாளர்கள், டாக்டர்கள் சிறப்பு சிகிச்சைக்கு நியமனம் செய்யப்படுகிறார்கள். கொரோனா சிகிச்சை வளாகம், உயர் சிறப்பு சிகிச்சை வளாகம், மகளிர் மற்றும் குழந்தைகள் சிகிச்சை ஆகிய கட்டடங்களில் உள்ள படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக மாற்றி அமைக்கப்படுகிறது.

அவசர மற்றும் கொரோனா அல்லாத சேவைகள், இயன்றவரை சிறப்பாக செயல்படும். தீவிர சிகிச்சை தேவைப்படும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால், ஜிப்மரில் கூடுதல் படுக்கை வசதிகள் உருவாக்கப்பட்ட உடனேயே நிரம்பி விடுகின்றன. இப்பகுதியில் உள்ள மற்ற மருத்துவமனைகள், சுகாதார நிறுவனங்கள் அவசர சிறப்பு படுக்கை வசதிகளை உருவாக்கி, நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X