பொது செய்தி

தமிழ்நாடு

தள்ளுபடியான 1642 தபால் ஓட்டு: நோட்டாவுக்கு 88

Added : மே 05, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான தபால் ஓட்டுகளில் 1642 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 451 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 1642 ஓட்டுகள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பதிவான தபால் ஓட்டுகளில் 1642 ஓட்டுகள் செல்லாத ஓட்டுகளாக தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், போலீசார் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டளிக்க தேர்தல் ஆணையம் வாய்ப்பு வழங்கியது. அதன்படி, மாவட்டத்தில் மொத்தம் 13 ஆயிரத்து 451 தபால் ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதில் 1642 ஓட்டுகள் செல்லாதவையென தள்ளுபடி செய்யப்பட்டன.

முன்மொழிவு படிவத்தை இணைக்காதது, படிவத்தில் அதிகாரியின் கையொப்பம் இல்லாதது, எந்த வேட்பாளருக்கு ஓட்டு என 'டிக்' செய்யாதது, வரிசை எண் இல்லாதது போன்ற காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டது.

நோட்டாவுக்கு 88 ஓட்டுகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக நிலக்கோட்டையில் 398 தபால் ஓட்டுகள் தள்ளுபடியானது. நத்தத்தில் 331, திண்டுக்கல்லில் 348, ஒட்டன்சத்திரத்தில் 82, வேடசந்துாரில் 157, ஆத்துாரில் 326 தபால் ஓட்டுகள் தள்ளுபடி செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X